சத்தியம்#1: சமாதானம்
யோவான்
14:27 சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக்
கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள்
இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.
சமாதானம்
என்ற வார்த்தை எபிரேயத்தில் ஷாலோம் என்று
அறியப்படுகிறது. ஷாலோம் என்றால் ஏதோ சண்டை சச்சரவு
இல்லாத நிலை, அமைதி, நிசப்தம் என்பது மட்டுமல்ல.
அது நலமுடைமை, ஆரோக்கியம், செழிப்பு,
இளைப்பாறுதல், பாதுகாப்பு மற்று முழுமையை குறிப்பிடுக்கிறது.
இயேசுவை
பின்பற்றும்படி எல்லாவற்றையும் விட்டுவந்த சீடர்கள் தங்களுடைய நாட்களை எல்லாம் இயேசுவோடுகூட
செலவழித்தார்கள். மூன்றரை ஆண்டு காலம் அவர்கள்
இயேசுவோடுகூட பயணித்தார்கள், ஊழியம் செய்தார்கள், புசித்தார்கள், குடித்தார்கள், உறங்கினார்கள். இயேசு இல்லாமல் அவர்கள் ஒரு நாளும் இருந்ததில்லை. அவர்களுடைய ஒட்டுமொத்த உலகமும் இயேசு, இயேசு என்றே
இருந்தது. பூமியிலிருந்து தான் எடுத்துகொள்ளப்படுவேன் என்று அவர் தன் நண்பர்களுக்கு
அறிவிக்கும்போது, அவர்கள் குழும்பி திகைத்து கலங்கிப்போனார்கள். அவர்கள் அப்படி ஆகக்கூடாது என்று வாதாடினார்கள்,
கேள்விக்கேட்டர்கள். இயேசு இல்லாத ஒரு வாழ்வை அவர்களால் யோசித்தும் பார்க்கமுடியவில்லை.
இயேசு மரிப்பார் என்பதை ஏற்க
அவர்களுக்கு மனமேயில்லை.
நம்முடைய
வீட்டிலும், நம்முடைய உறவுகள் தீடீரென்று நம்மைவிட்டு பிரிந்துபோகும்போதோ அல்லது மருத்துவர்கள் நாள் குறிக்கும்போதோ நாம் கலக்கமடைகிறோம். தூக்கமின்றி, நிம்மதியின்றி தவிக்கிறோம். அவர்களை இழக்க நாம் தயாராக இல்லை. கூடுதல் சிகிச்சை, கூடுதல் செலவு, கூடுதல் ஜெபம்,
கூடுதல் உபவாசம் என்று நம் முயற்சிகளை கூட்டிக்கொண்டேபோகிறோம். ஆனால், கடைசியில் நாம் எதிர்பாராத காரியம் நடக்கவேசெய்கிறது.
இயேசுவானவர்
உண்மையில் தம்முடைய சீடர்களை வரப்போகும் ஒரு நெருக்கடியான, இருளான, சவால்மிகுந்த காலக்கட்டத்திற்கு
தயார்படுத்திக்கொண்டிருந்தார். அதிக பணத்தையோ,
மிகுதியான சொத்தையோ, பெரிய ஊழியத்தையோ அவர் அவர்களுக்கு
விட்டுச்செல்லவில்லை. சொல்லப்போனால், அவர் ஒன்றையுமே
அவர்களுக்கு விட்டுச்செல்லவில்லை. ஆனால் அவர்களிடம்
அவர் தன்னுடைய விலையேறப்பெற்ற பொக்கிஷத்தை கொடுத்தார். சமாதானம் எனும் பொக்கிஷம். அவருக்கே சொந்தமான சமாதானம்.
இயேசுவானவர்
அவர்களிடம் சொன்னதை எளிய வார்த்தைகளில் நான் பொழிப்புரை செய்வேனானால் அது இப்படித் தான்
இருக்கும் என்று நினைக்கிறேன் "நண்பர்களே, என்னுடைய மரணம் உண்மையில் ஒரு பெரிய பயத்தை, அழுத்தத்தை
உங்களுடைய இருதயத்தில் உருவாக்கும். ஒரு தொற்று
வியாதியை போல் அது உங்களை கொல்லவும் செய்யலாம்
ஆனால், என்னிடம் அதற்கான எதிர்மருந்து,
ஒரு தடுப்புமருந்து, ஒரு தீர்வு உண்டு. உலகத்திலே
அந்த மருந்து கிடைக்காது. அது நான் கொடுக்கும்
என்னுடைய சமாதானம். என் சீடர்கள், என் உடன்-சுதந்தரர்களாய்
இருக்கும் உங்களுக்கு மட்டுமே உரிய சமாதானம் அது. நான் அந்த சமாதானத்தை உங்களுக்கு விட்டுசெல்லுகிறேன். இந்த சமாதானம் எனும் தடுப்பூசியை உங்கள் வாழ்க்கையில்
நீங்கள் எடுத்துக்கொண்டால் துக்கம் மற்றும்
பிரிவின் தாக்குதலை உங்களால் நிச்சயமாய் எதிர்கொள்ளமுடியும்.
இயேசு
கிறிஸ்துவின் சீடர்களான் நாமும் கூட இயேசுவை நம் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டபோதே
இந்த சமாதானத்தை பெற்றுக்கொண்டோம்.
துக்கம்
மற்றும் துயரத்தின் பாதிப்புகளிலிருந்து உங்களை தற்காத்துக்கொள்ள 'இயேசுவின்' சமாதானம்
என்கின்ற இந்த தடுப்பு மருந்தை நீங்கள் எடுத்துகொள்ளவேண்டும்.
உங்களுக்கு
சமாதானம் உண்டாவதாக!
நாளை…
No comments:
Post a Comment