சத்தியம்#2 : பொறுமை
லூக்கா 21:19 உங்கள் பொறுமையினால் உங்கள் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள்.
ஒருமுறை இயேசு தம் சீடர்களிடம், ஆத்துமாவைக்
கொல்ல வல்லவர்களாயிராமல்,
சரீரத்தை மாத்திரம்
கொல்லுகிறவர்களுக்கு நீங்கள்
பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும்
சரீரத்தையும் நரகத்திலே
அழிக்க வல்லவருக்கே
பயப்படுங்கள்
என்றார் (மத்தேயு 10:28)
கொரோனா, புற்றுநோய், மாரடைப்பு.
அழிவினைக் கொண்டுவரும் வியாதிபெலவீனங்களுக்கு நாம் என்ன பெயர் கொடுத்தாலும்
சரி, இவைகள் ஒவ்வொன்றும் நம்முடைய சரீரத்தை மட்டுமே தாக்கக்கூடிய வலிமைபடைத்தவை. சரீரம்
என்பது கழற்றிப்போடக்கூடிய போர்வை என்றும்
வெளியேறும் கூடாரம் என்றும் வேதம் சொல்லுகிறது. சுகமோ சுகவீனமோ, நம்முடைய சரீரங்கள் அழிவுக்கு ஏதுவானைவைகளே! மனித உறுப்புகளின் திறன் வயது செல்ல செல்ல குறைந்துகொண்டே
போகும். இது படைப்பின் நியதி!
அதே சமயம் நம்முடைய ஆத்துமா, அந்த உள்ளான மனிதன், அந்த உண்மையான மனிதன்
அப்படிப்பட்டதன்று மரணம் சம்பவிக்கும்போது இச்சரீரத்தை இங்கே விட்டுவிட்டு பரமவாசஸ்தலத்தில்
குடியேறச் செல்கிறோம். வைரஸ் கிருமி நம்முடைய சரீரத்தை பாதிக்கலாம், உடலுறுப்புகளுக்கு
சேதத்தையும் விளைவிக்கலாம். ஆனால் அவைகளால்
நம்முடைய ஆத்துமாவை தொடவோ, தீண்டவோ முடியாது. மருத்துவமனை படுக்கையில் இருக்கும் நோயாளியை நான்
காப்பாற்றமுடியாது என்று மருத்துவர் அறிவிக்கும்போது அவர் அந்த பிணியாளியின் அத்துமாவை அல்ல, அவர் தங்கியிருக்கும்
சரீரத்தையே குறிப்பிடுகிறார்.
தேவபிள்ளையின் ஆத்தும ஏற்கனவே ஒருரால் காக்கப்பட்டுவிட்டது. அது மரணத்தில் இடம்பெயருகிறது, அவ்வளவுதான்!
சடுதி மரணம், சாகடிக்கும் கொள்ளைநோய் நமக்குள் ஆயிரமாயிரம் கேள்விகளை
எழுப்பிடலாம். ஏமாற்றத்தின் உச்சத்திற்கு சென்ற யோபின் மனைவியைப் போல், ஒருவேளை,
நாம் தேவனை சபிக்கலாம், அவருடைய உண்மையை சந்தேகிக்கலாம், நன்மையை நம்பாமலும் போகலாம்.
பொறுமையின்மையினால் சவுல் தன் இராஜ்யத்தை இழந்தான்,
இஸ்ரவேலர் கானானை இழந்தார்கள், வாக்குத்தத்தம்பண்ண தேசத்திற்குள் மக்களை நடத்தும் சிலாக்கியத்த்தை
மோசே இழந்தான், அவசரப்பட்டு தேவனுடைய பெட்டியை
தொட்ட உசா உயிரையே இழந்தான். பொறுமையை இழந்ததினால் தங்கள் வாழ்க்கையில் பெரும்
நஷ்டத்தை சந்திக்க அநேகரின் கதைகளை வேதம் பட்டியலிடாம்ல் இல்லை.
இப்படிபட்டவைகளின் நிமித்தம், உங்கள் வாழ்க்கைப் படகும் தத்தளித்துக்கொண்டிருக்கலாம். ஆனால் பொறுமையுடன் இருங்கள். காரண காரியங்களை நீங்களாகவே யோசித்து, யூகித்து, அனுமானித்து, அழுதுகொண்டிருக்கவேண்டாம். தேவனுக்கு இடங்கொடுங்கள். உங்கள் வாழ்க்கையை இன்னொரு விசை அவரிடம் ஒப்புக்கொடுங்கள். நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது.(யாக்கோபு 1:4)
பொறுமையின்மை ஒரு நோய். பொறுத்தார் பூமியாள்வார்!
வாசியுங்கள்: ரோமர் 5:3,4 ரோமர்
15:5, 2 கொரி 6:4, யாக்கோபு 1:3, எபிரேயர் 10:36, எபிரேயர் 6:12
No comments:
Post a Comment