இறந்தோரும், இருப்போரும் : ஆய்வுசெயதிடு! அர்ப்பணித்திடு!
உறவுகளையும், உடல்சுகத்தையும், ஊக்கத்தையும் இழந்து தவித்து துயரத்தில் வாடும் அன்பர்களுக்கு தேவனுடைய வார்த்தை மட்டுமே, தேவனிடத்திலிருந்து வரும் வார்த்தை மட்டுமே ஆறுதலையும், தேறுதலையும், தைரியத்தையும் கொடுக்கும் என்ற சத்தியத்தை நிலைநாட்டும் நோக்கத்துடன் இந்த வலைபதிவை ஆரம்பித்தோம்.
மெய்யாகவே, இந்த பெருந்தொற்றின் நாட்களில், உடைந்து, உருக்குலைத்து, சிதைந்த, ஏமாற்றமடைந்த மக்களுக்கு ஒரு மருந்து, ஒரு பிசின் தைலம் அவசியம்.
வியாதியிலிருந்து மீண்டாலும், நீண்ட நாட்கள் மருந்தையும் விட்டமின் மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று மருத்துவர் சொல்வதுபோல், நாம் உயிர்வாழ, தேவனுக்கு பிரியமான ஒரு வாழ்க்கையை வாழ, தேவத்தீர்மானங்களை நிறைவேற்றும் ஒரு வாழ்க்கை வாழ, நமக்குள் கிறிஸ்துவை பிரதிபலிக்கும் ஒரு வாழ்வினை வாழ, பின்வரும் காரியங்களை கைகொள்ளவேண்டும்.
இந்த மருத்துவத்தை, ஒரு மாதமல்ல, உங்கள் வாழ்நாள் முழுக்க எடுக்கவேண்டும்.
இயேசுவின் சமாதானத்தை இழக்காதிருங்கள்
யோவான் 16:33 என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்
உபத்திரவத்தில் பொறுமையாயிருங்கள்
எபிரேயர் 10:36 நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது
தேவசமூகத்தை நித்தமும் நாடித் தேடுங்கள்
யாத்திராகமம் 33:14 அதற்கு அவர்: என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றார் தேவன் தந்த புதுவாழ்விற்காக அவரை ஸ்தோத்தரியுங்கள்
சங்கீதம் 41:2 கர்த்தர் அவனைப் பாதுகாத்து அவனை உயிரோடே வைப்பார்; பூமியில் அவன் பாக்கியவானாயிருப்பான்; அவன் சத்துருக்களின் இஷ்டத்திற்கு நீர் அவனை ஒப்புக்கொடீர்
நித்தியஜீவனுக்கான வாக்குத்தத்தை பற்றிக்கொள்ளுங்கள்
1 யோவான் 5:11 தேவன் நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச்சாட்சியாம்.
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக….மறுபடியும் சந்திப்போம்!
No comments:
Post a Comment