Monday, June 7, 2021

சத்தியம் 5#வாக்குத்தத்தம் (இறந்தோரும், இருப்போரும்)


சத்தியம் 5#வாக்குத்தத்தம் (இறந்தோரும், இருப்போரும்)  

1 யோவான் 2:25 நித்திய ஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம்

                                                                                                                                                                      இறந்தோர் அடைந்ததை, இருப்போர் பற்றிக்கொள்ளவேண்டும்.

                                                                                                                                                                      ஆதிமுதற்கொண்டே மனிதமுளையானது காரியங்களை ஒரு தற்காலிக அல்லது காலஅளவுகோளின் அடிப்படையிலேயே புரிந்துகொள்ளவும், விளக்கம் சொல்லவும் முயன்று வருகிறது.  அவனை பொறுத்தமட்டில் எல்லோருக்கும் ஒரு கால எல்லை அல்லது முடிவு  உண்டு என்றே நினைக்கிறான். 

                                                                                                                                                                    அவனுடைய பெற்றோர், பெற்றோரின் பெற்றோர் இருக்கிறார்கள் என்றாலும் அவர்கள் ஒரு நாளில் இருக்கபோவதில்லை.  கல்லறை களில் அவன் பார்ப்பது ஒருவரின் பெயர், அவருடைய  பிறந்த நாள், அவருடைய இறந்த நாள்.    பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே உள்ளது தான் மனித வாழ்க்கை என்பது அவன் தார்ப்பரியம்.   காலம் மற்றும் இடத்தின் விதிகளுக்கு உட்படாத ஒன்றையும் அவன் அறியான்.   ஒருவர் நித்தியம், சதாகாலம், நீடிய வாழ்வு என்று சொல்லும்போது, அவனுடைய அறிவுதிறன் அதனை முழுமையாக ஏற்கவோ, புரிந்துகொள்ளவோ, கற்பனை செய்யவோ தயங்குகிறது. 


வாழ்ந்துகொண்டே இருப்போமா? ஆமாம். நம்பமுடியாத ஒன்றாக இருந்தாலும் அது உண்மை.  அது தேவன் நமக்கு அருளும் பெரிதான ஈவு.  ஆனால், அழிவுக்கு ஏதுவான இந்த சரீரத்திற்குள் நமக்கு  நித்திய வாழ்வு உண்டு என்று அவர் சொல்லவில்லை.  அது அசாத்தியமானதும் நடைமுறைக்கு ஒத்துவராததுமான ஒன்று.  அப்படியானால்? 

                                                                                                                                                                       அசிசியின் தூய பிரன்ஸிஸ் சொலுகிறார்: நம்முடைய மரணத்தில் தான் நாம் நித்திய ஜீவனுக்குள் பிறக்கிறோம்

                                                                                                                                                                        கோரி டென் பூம் சொல்வது என்னவென்றால:   நித்திய வாழ்வு நம்முடைய என்பது நாம் பரலோகம் சென்றவுடன் ஆரம்பிக்கும் ஒன்றல்ல.  நீங்கள் எப்போது இயேசுவை ஏற்றுக்கொள்கிறீரகளோ அன்றே அது தொடங்கிவிட்டது.   அவர் ஒருவரையும் புறம்பே தள்ளுவதில்லை.  அவர் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறார்

                                                                                                                                                                  மறுபிறப்படைந்த விசுவாசி 20, 40, 60, ஏன் 100 வயதுக்கூட வாழ்ந்திடலாம்.   ஆனால், நித்தியத்தின் பார்வையில் அவைகள் ஒரு சிறு துளி.   அவனுக்கு வாழ்க்கை மரணத்தில் தான் ஆரம்பிக்கிறது.  தேவனோடுள்ள வாழ்வு.   அழுகை, வேதனை, வியாதி, பெலவீனம் போன்ற ஒன்றுமே இல்லாத  வாழ்க்கை.  சிலர் சொல்லலாம், பரலோகம் என்று ஒன்று இல்லை என்று.  அது அவர்களுடைய வரையறுக்கப்பட்ட சிந்தையுணர்வு.  ஆனால் நாம் நிற்பதோ வாக்குத்தத்தத்தில்!   விசுவாசிகளாகிய நாம் நிலையான, நித்திய வாழ்விற்கு  அழைக்கப்படிருக்கிறோம்.

                                                                                                                                                                      நித்திய வாழ்வு கிறிஸ்துவின் ஈவு (ரோமர் 6:23)

நித்திய வாழ்வு கிறிஸ்துவினால் காக்கப்படுகிறது ( யோவான் 10:28)

நித்திய வாழ்வு கிறிஸ்துவினால் கட்டப்படுகிறது (யூதா 1:21)

                                                                                                                                                                      நித்திய வாழ்வு என்பது ஏதோ நம்முடைய மரணத்திற்கு பின் நாம் பெற்றுக்கொள்ளும்  ஒரு வாழ்க்கையன்று.  இவ்வுலகத்தை விட்டு நாம் குடிபெயரும்போது நம்மோடு கூட எடுத்துச்செல்லும் ஒரு அதிசய வாழ்வு. அதுவரையில் அதை நாம் பற்றிக்கொள்ளவேண்டும், பாதுகாக்க வேண்டும். 

எதை பிடித்துக்கொள்ளவேண்டும்?  சுருங்க சொன்னால், இயேசுவை பற்றிக்கொள்ளுங்கள், போதும். 

(நாளை இதன் நிறைவு)

No comments:

Post a Comment

I WILL COME | PROMISE | GOD'S SHADOW MINISTRIES | MARCH 2025

  I WILL COME AND HEAL HIM PROMISE | MARCH 2025 Mat hew 8:7   And Jesus saith unto him, I will come and heal him   Dearly beloved...