இறந்தோரும் இருப்போரும்
சங்கீதம் 107:20 தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி(னார்)….
அதிகபட்ச
மருத்துவம், இடைவிடாத ஜெபம், விசுவாச அறிக்கை என்று எல்லாவற்றையும் செய்தபின்னும் நம் உறவுகள இழப்பது
நம்மை வேதனைப்படுத்துகிறது. நாம் ஒடிந்து,
துவண்டு, உருகி உருக்குலைந்துபோகிறோம்.
மரித்தவர்
இயேசுவிடமே சென்றுள்ளார், மகிமைக்கு முன்னேறியுள்ளார் என்று நம்முடைய ஆவிக்குரிய அறிவு நமக்கு போதிப்பதென்னவோ
உண்மைதான். நம் பிள்ளைகள் அடுத்த வகுப்பிற்கு
தேர்ச்சியடையும் போதும், வேலையில் உயர்வை பெறும்போதும்
நாம் அழுது புலம்பி ஒலமிடுவதில்லையே! இவைகள்
நம்மை துயரப்படுத்துவதில்லை, மாறாக கொண்டாடவைக்கும். ஆனாலும்
மரணத்தை அவ்வளவு இலகுவாய், அவ்வளவு சாதாரணாமாய் நம்மால் எடுத்துக்கொள்ளமுடிகிறதா?
லாசருவின்
கல்லறையக்கு சென்ற இயேசு தாம் செய்யப்போகிறது இன்னது என்று அறிந்திருந்தார். மரித்தவன் உயிரோடு வரப்போகிறான். ஆனாலும் இயேசு அங்கே "கண்ணீர் வீட்டார்"
என்று வாசிக்கிறோம். ஆண்டவரும் இரட்சகருமானவர்
ஒரு அற்புதத்தை அங்கே நிகழ்த்துவார் என்றாலும்,
மனிதனாகிய இயேசுவோ மறைவினால் வரும்
வலி, வேதனை, உளைச்சல் மற்றும் துயரத்தை உணரந்தவராய்
காணப்பட்டார். இயேசு அவர்களுடைய அவிசுவாசத்தை
கண்டித்தாலும், அவர்களுடைய துக்கத்தில் மெய்யாகவே பங்கெடுத்தார்.
அன்பான
உங்கள் உறவுகளின் இழப்பை எண்ணி வேதனையில் வாடுகிறீர்களா? ஒருவேளை உங்கள் நண்பர், உறவினர், சக விசவாசி அல்லது
தூரத்துசொந்தம் இந்த பாதையில் பயணித்துகொண்டிருக்கலாம். ஒருவரை இழந்தவர்களும், ஒரே மாதத்தில் ஒன்றுக்கு
அதிகமானோரை இழந்த குடும்பங்களும் உண்டு. இருப்போரையும்
இழந்திடுவோமோ என்ற பயம், பதட்டம் துக்கங்கொண்டாடும் வாய்ப்பையும் அளிப்பதில்லை. நாம் பெலவீனப்படுகிறோம்!
ஆயிரமாயிரம் மனித வார்த்தைகள் அவர்களுக்கு ஆறுதலை கொடுக்காது.
பிரிவின்
சில நாட்கள், சில மாதங்களும் நீடிக்கும். தேவனுடைய
வார்த்தை, தேவனிடத்திலிருந்து வந்த வார்த்தை மட்டுமே அவர்களை குணப்படுத்தமுடியும்.
ஜெபத்துடன்,
இச்சிறு தொடர் பதிவின் மூலம், தேவன் என் உள்ளத்தில்
பாரப்படுத்தியுள்ள சில சிந்தனைகளை, வார்த்தைகளை, சத்தியங்களை உங்களுக்கு அனுப்ப விரும்புகிறேன்.
அடுத்த
சில நாட்கள், இந்த சோதனையின் காலத்திலும் நாம் மிக உறுதியாய் பற்றிக்கொள்ளக்கூடிய
"ஐந்து முக்கிய சத்தியங்களை" உங்களோடு
பகிர விரும்புகிறேன். இவைகள், கர்த்தருடைய வார்த்தைகள்.
இவைகளால்
நாம் பெலனடையவேண்டுமென்பதே என் நோக்கம், என் ஜெபம்.
பெலனடைந்து
பெலப்படுத்தவோம்!
நாளை…
No comments:
Post a Comment