RAGING
WAVES (2/14)
God's
breath
Eze
37:5 Thus saith the Lord GOD unto these bones; Behold, I will cause
breath to enter into you, and ye shall live:
What is freely available to all of us, all over us has suddenly become
a precious, priceless and rare commodity!
The talk of the town, the newspaper headlines are only talking about 02 or
Oxygen as it is generally referred to. Hospitals have become helpless
centres. Governments are running helter
skelter with stock depleting Nations are
coming forward to pump in oxygen seeing the debilitating state of our
nation. Thermometer is replaced by Pulse
oximeter. Even better feeling people get
stressed looking at the reading. Even
before the virus could infect the lungs and obstruct the free flow of air into
the windpipes, the element of worry extrapolates into our cells extinguishing
our extant immunity. Even if our mind
is cheerful, an eerie scan report would
eat all our peace. The waves may ride
very high, but the one who stillest them is in us, is with us. The medical world may throw in their towel. We may run here, run there to procure few
cylinders.
The Bible says that man was formed out of the dust of the ground,
received his breath (of life) from the creator when he breathed his breath into him. The man who received the breath of God then became a living soul. Once Lord Jesus
Christ breathed on his disciples and said to them "Receive the Holy
Spirit".
Today the selfsame Spirit of God which is in you shall cause you to
live. Ezekiel recounts of an incident
where the dry bones came to life when God breathed into them. Today, if thou
shalt believe, the same God will cause his breath to enter into you and you
shall live - A LIFE LED BY THE SPIRIT!
Lord rules over the waves. Lord gives to us breath.
Amen!
(We shall Breathe) கொந்தளிக்கும் அலைகள் (2/14)
தேவனுடைய சுவாசம்
கர்த்தராகிய ஆண்டவர் இந்த எலும்புகளை நோக்கி: இதோ, நான் உங்களுக்குள்
ஆவியைப் பிரவேசிக்கப்பண்ணுவேன்; அப்பொழுது உயிரடைவீர்கள் (எசேக்கியல்
37:5)
இலவசமாய் கிடைத்த ஒன்று, நம்மை
சுற்றிலும் வியாபித்திருக்கும் ஒன்று, இப்போது சடுதியில் விலைமிகுந்த, கிடைப்பதற்கரிய
ஒன்றாக மாறிவிட்டது. செய்தித்தாள்களிலும்,
ஊடகங்களிலும் நிரம்பியிருப்பது பிராணவாயுவை
பற்றிய செய்திகளே! மருத்துவமனைகள் மனிதனை காக்கமுடியா
மையங்களாகவிட்டன. அரசாங்கங்கள் ஆக்சிஜனுக்கு இங்குமங்குமாய அலைகின்றன. பேரழிவுக்கு நேரே போய்க்கொண்டிருக்கிறதே என்று
பரிதவித்து பல தேசங்கள் தங்கள் உதவிகளை அனுப்பிக்கொண்டிருக்கின்றன! தெர்மாமீட்டரின் இடத்தை ஆக்சிமீட்டர் பிடித்துவிட்டது. அதன் அளவீடுகளை கண்டு நலமுடன் இருப்போரும் ஆட்டம்காண்கிறார்கள். நுண்கிருமி நம்முடைய நுரையீரல்களை தாக்கும் முன்,
பயம் எனும் பூச்சி நம் நாடி நரம்புகளிலிருந்து எதிர்ப்புதிறனை தின்றுவிடுகிறது. சிந்தை தெளிவாக இருந்தாலும், சி.டி ஸ்கேன் ரிப்போர்ட்
நம்மை நிலைகுலைய செய்கிறது. அலைகள் உயர எழும்பலாம்.
ஆனால், அவைகளை அமர்த்துகிறவர் நம்மோடுண்டு.
மருத்துவ உலகமும் கைவிரித்துவிடலாம்.
சிலிண்டர்கள் கிடைக்குமா என்று நாமும்கூட
இங்குமங்கும் அலையலாம்!
மனிதனை தேவன் பூமியின் மண்ணிலிருந்து படைத்தார். அவனுடைய நாசியில் தேவன் தன்னுடைய சுவாசத்தை ஊதினார்,
தேவனுடைய சுவாசத்தை பெற்றுக்கொண்டவனே ஜீவ ஆத்துமாவானான் என்று வேதம் சொல்லுகிறது. இயேசு கிறிஸ்துவும் ஒருமுறையும் தம்முடைய சீடர்கள் மேல் சுவாசத்தை ஊதி "பரிசுத்த
ஆவியை பெற்றுக்கொள்ளுங்கள்" என்றார்.
இன்றும் அதே தேவனுடைய அவி உங்களை வாழ்வைக்கும். உங்களுக்கு பிழைப்பூட்டும். உலர்ந்த எலும்புகளின் தேவன் தம் சுவாசத்தை அனுப்பும்போது
அது உயிரடைகிறது என்றார் எசேக்கியல். இன்றும்,
நீங்கள் விசுவாசித்தால், அதே தேவன் தம்முடைய சுவாசத்தை உங்கள்மேலும் வரப்பண்ணுவார். இன்றைக்கு நீங்கள் விசுவாசித்தால், அதே தேவன் தம்முடைய
ஆவியை - தம்முடைய சுவாசத்தை உங்கள்மேல் வரப்பண்ணுவார் - ஆவிக்கேற்றபடி வாழ்ந்திட!
தேவன் அலைகளின் மேல் ஆளுகை செய்கிறார். தேவன் நமக்கு ஜீவசுவாசத்தை தருகிறார்!
ஆமென்!
(சுவாசிப்போம்
இன்னும்)
Amen!
ReplyDelete