Sunday, May 9, 2021

Raging Waves | கொந்தளிக்கும் அலைகள் (Blog)

 


The Second wave (1/14)

Psa_89:9  Thou rulest the raging of the sea: when the waves thereof arise, thou stillest them.

The Second Wave….that is what the present pandemic is being called.  Will there be third, fourth?  They say, it will be.    The Second Wave, whether we were prepared or not, has really caught has napping.   We thought we overcame Covid 19.  We thought with vaccine in place, things would be normal once again.  And now it is time Politics. Planning. Programmes. Preaching….what more??   But whether we realize it or not, whether we wish to hear it from the media or not, this second deadly new strain is indeed causing havoc.  When the first wave struck, there was of course fear and worry.  Many were struck, many lost their lives.  And those who escaped unscathed (if not all) thought their immunity, their sanitation and more so, their devotion only helped managed this pandemic!  But this time around, the (new) strain is not not only sweeping, but swallowing.   Some put forth (intellectual) statistics to prove that it is not abnormal for a nation to lose so many in a given span. Seriously, a loss of life, within our circle, will not be a statistic.  It will be a stress, suffering untold.   Surely, nobody is ok to lose their loves ones for Covid.  But the reality is indeed distressing.  The author, his family, near ones who scraped through the first wave were caught in the second.  Some suffered and crossed. Some are suffering still. Saints and Servants of God are quickly vanishing from the scene.    Surely,  relentless prayers are on. But one reality is striking or hitting us hard.  It looks as if this pandemic was sent to tear our faith, trample our devotion, terrify our testimony.   Will it succeed.. or should it succeed?….. (Writer's Wave rages…)

கொந்தளிக்கும் அலைகள்

இரண்டாவது அலை (1/14)

தேவரீர் சமுத்திரத்தின் பெருமையை ஆளுகிறவர்; அதின் அலைகள் எழும்பும்போது அவைகளை அடங்கப்பண்ணுகிறீர் (சங்கீ 89:9)

இரண்டாவது அலை...இவ்வாண்டின் பெருந்தொற்றின் தாக்கத்திற்கு இவர்கள் வைத்திருக்கும் பெயர்.   மூன்றாவது, நான்காவது அலையும் தாக்கும் என்கிறார்களே?   தூங்கிவழிந்த வேலையில் திருடன் வந்ததுபோல் தான் இது உள்ளது!  வென்றோம் கோவிட்டை. இனி கவலையில்லை என்று எண்ணினோம்.   தடுப்பூசி வந்துவிட்டது இனி பயமில்லை என்று பெருமிதம்கொண்டோம் (தடுப்பூசி போட்டுக்கொள்ளாமலேயே!)  இனி அடுத்த வேலையை பார்க்கவேண்டியது தான்…அரசியல், தொழில், வீடு, கல்வி, திருமணம்….பரபரவென்று ஓட்வேண்டியது தான்… ஆனால், நாம்  புரிந்துகொண்டோமா இல்லையோ?, ஊடகங்கள் இதை பற்றி அறிவித்ததோ இல்லையோ…தெரியவில்லை….இந்த உருமாறின கொரோனோ உண்மையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது.   முதல் அலை வீசியபோது, நமக்கும் பயமும் கவலையும் இல்லாமல் இல்லை.   அநேகர் பாதிக்கப்பட்டனர். அநேகர் மாண்டும்போயினர்.  ஆனால் அறிகுறியின்றி தப்பித்துக்கொண்டவர்கள்  தங்கள் எதிர்ப்பு சக்தி, தங்கள் சுத்தம், எல்லாவற்றிற்கும் மேலாக தங்கள் தெய்வபக்தியே காத்தது என்று எண்ணியிருக்கலாம்.  ஆனால், இம்முறையோ, இந்த உருமாறின கிருமி மக்களை முழ்கடிக்கவில்லை,  அது ஜனத்தை விழுங்கிவருகிறது.   அறிவார்ந்த வல்லுனர் சிலர் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் இத்துனை மேர் மரிப்பது புள்ளியியலின்படி அதிகமல்லவே எனலாம்.  ஆனால், உண்மையில், ஒரு இழப்பு, அதுவும் நம் உள்வட்டத்திற்குள் எற்படுமானால், அது ஒரு  புள்ளிவிவரமாயிராது.,  அது ஒரு  (ஆறாத) புண்ணாகவே இருக்கும்.   கொரோனா வந்து உறவுகளை எதிர்பாராத விதத்தில் இழப்பதை யார்தான் விரும்புவர்?  உண்மை உண்மையில் உள்ளத்தை உடைக்கக்கூடிய ஒன்றாகவே உள்ளது.   இத்தொகுப்பின் ஆசிரியரும், இவர் குடும்பமும், இன ஜனபந்துக்களும் முதல் அலையில் தப்பினாலும் இரண்டாவது அலையில் மாட்டிக்கொண்டார்கள்.  சிலர் பாதிப்பிலிருந்து மீண்டார்கள்.   சிலர் பாதிப்பில் உள்ளனர்.   நம்முடன் இருந்த பரிசுத்தவான்கள் படுவேகத்தில் நம்மைவிட்டு சென்றுக்கொண்டிருக்கிறார்கள்.  ஜெபங்களின் தீவிரம் குறையவில்லை.  ஆனாலும்,,  ஒரு உண்மை நெத்தியடிபோல் நம்மை அடிக்கதொடங்கிவிட்டது.  இந்த பெருந்தொற்று நம்முடைய விசுவாசத்தை சிதைக்க, பக்தியை குலைக்க, சாட்சியை அழிக்க அனுப்பப்பட்ட ஒன்றோ?  அது மேற்கொள்ளுமா?   அது மேற்கொள்ளவேண்டுமா?  (ஆக்கியோனின் அலை  கொந்தளிக்கும்..)

No comments:

Post a Comment

I WILL COME | PROMISE | GOD'S SHADOW MINISTRIES | MARCH 2025

  I WILL COME AND HEAL HIM PROMISE | MARCH 2025 Mat hew 8:7   And Jesus saith unto him, I will come and heal him   Dearly beloved...