பயமுகமும்
போர்முகமும்
சங்கீ 18:29 உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்.
புதிதாய்
அமைந்த தமிழ்நாடு ஆரசு, சமீபத்தில் கோவிட்-19
யுத்த அறையை (Covid 19 War Room) ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனை படுக்கைகள், ஆம்புலன்ஸ் வசதி மற்றும்
ஆக்சிஜன் வசதியை கண்காணிக்க, கட்டளை பிறப்பிக்க இதனை ஏற்படுத்தியுள்ளார்கள். யுத்த அறை
என்றால் என்ன? ஒரு அலுவலகம் அல்லது ஒரு அரசாங்கத்தில்
முக்கியமான பொறுப்பில் உள்ள மக்கள் சிக்கலான பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு கூடிவந்து
தீர்மானம் எடுக்கும் இடமே யுத்த அறை. பெருந்தொற்றின்
பிடியில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு இது உண்மையில் ஒரு அவசிய தேவை.
பேக்டீரியா,
வைரஸ், பூஞ்சை போன்ற அழையா விருந்தாளிகளை எதிர்க்கும், போராடும் தன்மை நம்முடைய உடலிலே
உள்ளது. அதனையே நாம் மனிதனின் நோய்எதிர்ப்பு சக்தி என்கிறோம். அது சத்துருக்களின் வலிமையை அதமாக்குகிறது. தேவன்
நம்மை அவ்விதமே படைத்துள்ளார்.
நான்கில்
ஒருவர் தொற்றினால் பாதிக்கப்படுகிறார்கள் என்று இருக்கையில், நாம் அந்த நான்காவது நபராகவும்
மாறலாம்! நாம் அந்த வரிசையில் இருக்கக்கூடாது
என்று நினைக்கலாம். அப்படி ஆனால் தான் என்ன?
ஆகவேண்டும் என்று சொல்லவில்லை. நாம் எல்லா
முன்னெச்சரிக்கைகளை கைகொள்கிறோம். ஆனாலும்???!!!
பாருங்கள். யாருமே வியாதி அல்லது தொற்றை தங்களுடைய வீட்டுக்குள்
வரவழைப்பதிலை. வரவழைக்கவிரும்புவதுமில்லை.
ஆனாலும் ஒரு நாட்டின் மேல் அதன் சத்துருக்கள் படையெடுக்கிறார்கள் என்றால், ஒரு
வலிமையுள்ள இராஜா என்ன செய்வார்? அவர் தன்னை
ஒளித்துகொள்வாரா அல்லது யுத்தமுனையில் எதிரியை எதிர்கொள்வாரா?
யோசேபாத் ராஜாவின் ஆளுகையில் கீழ் இருந்த குட்டி நாடான இஸ்ரவேலை பிடிக்க மூன்று பெரிய நாடுகள் கூடிவந்தன. பார்க்கப்போனால், இவர்களுடைய கூட்டு வலிமைக்கு முன்பாக உண்மையில் இஸ்ரவேல் ஒரு சிறு பூச்சி என்றால் அது மிகையாகாது. போராட்டமேயின்றி அவர்களால் ஜெயிக்கமுடியும்! ஆனாலும் ராஜாவின் பிரதபலிப்பு எப்படி இருந்தது?
1. தன்னிடம் பெலன் இல்லை என்பதை அவன் ஒத்துக்கொண்டான்.
ஆனாலும் தோல்வியை உடனே அவன் தழுவவில்லை.
2. தேவனிடம்
முறையிட்டான். தேவனிடம் பாவ அறிக்கை செய்தான். தேவனுடைய ஊழியர்களின் சொல்லை கேட்டான். தான் ஆராதிக்கும் தேவன் தன் சத்துரக்களை காட்டிலும்
பெரியவர் என்பதை அவன் நன்கு அறிந்திருந்தான்.
3. தேவனுடைய ஆலோசனை அவனை பதுங்க சொல்லவில்லை. மாறாக பாயும்படிச் சொன்னது. ராஜா தன் ஜனத்தை யுத்தத்தில் வழிநடத்தினான். தேவனோ சத்துருக்களை அவர்கள் எதிர்பாராத விதத்தில்
யுத்தமுனையில் நசுக்கிப்போட்டார்.
கோவிட் பரிசோதனை முடிவுகளை கண்டு
சிலர் அஞ்சுகின்றனர். அது நெகடிவ் ஆக வரவேண்டும்
என்று கேட்கிறார்கள், ஜெபிக்கிறார்கள். அது
பாசிடிவ் ஆக வரட்டும் என்று சொல்லவில்லை. வரக்கூடாது
தான். ஆனால், அப்படி பாசிடிவ் என்று சொல்லிவிட்டார்கள்.
நாம் பதுங்கவேண்டுமா, பாயவேண்டுமா? நாம் யுத்தவீரர்களாய் இருக்கும்படி அழைக்கப்பட்டுள்ளோம். யுத்தத்தை அதன் வாசல்மட்டும் திருப்புகிறவர்களின்
பராக்கிரமமாகவும் இருப்பார். தொற்று உறுதிசெய்யப்பட்டுவிட்டதா, அல்லது தொற்றின் அறிகுறி
காணப்படுகிறதா, அதை நேருக்குநேர் சந்தியுங்கள்! இராஜாதி இராஜன். கர்த்தாதி கர்த்தர். சேனைகளின் கர்த்தர் உங்களோடு இருக்கிறார்! இயேசுவின்
நாமத்தில் நீங்கள் மேற்கொள்ளுவீர்கள். வியாதியானாலும்,
பெலவீனமானாலும், பிசாசை உங்கள் காலின் கீழ் நசுக்குவீர்கள்! விசுவாசித்தால், ஆமென். என்று சொல்லுங்கள்!
No comments:
Post a Comment