கொந்தளிக்கும் அலைகள் (7/14)
ஐந்து கோட்பாடுகள்
யோவான் 3:15: தன்னை
விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும்.
பூமியிலே பிறக்கும் ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையும் ஒரு
காலாவதி தேதியோடுகூட வருகிறது. நம்முடைய பாட்டனார்களின்
சந்ததி, முப்பாட்டனார்களின் சந்ததி நம்மைவிட்டு
கடந்துசென்றுவிட்டது. அவர்கள் இப்ப்பூமியில்
தோன்றினர், வாழ்ந்தனர் பின்னொரு நாளில் மரித்தும்போயினர். ஒரு தலைமுறை
போகிறது, மற்றொரு தலைமுறை வருகிறது. ஒரு மனிதன்
மரிக்கிறான். இன்னொரு மனிதன் (ஓரு குழந்தையாக)
பிறக்கிறான். அன்றியும், ஒரேதரம் மரிப்பதும்,
பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே (எபிரேயர்
9:27)
ஆனாலும், நம்முடைய நெருங்கிய உறவுகளின் உயிர் இப்பெருந்தொற்றுக்கு
இரையாவதை, இளம் குடும்பத்தலைவர்கள் இப்போராட்டத்தில் மாண்டுமடிவதை, இளம்பிஞ்சுகளை அனாதையாக்கிவிட்டு அம்மாக்கள் மருத்துவமனையிலிருந்து
நேரே கல்லறை தோட்டத்திற்கு போவதை எல்லாம் கேட்கும்போது நம்முடைய உள்ளம் சுக்குநூறாக
உடைகிறது. மனிதவாழ்க்கையில் மரணம் தவிர்க்கமுடியாத
ஒன்றாக இருக்கலாம். ஆனால், ஏன் இவ்வளவு சீக்கிரத்தில்? என் இந்த விதத்தில்? இளம் தம்பதிகளுக்கு ஏன்? வல்லமையான தேவஊழியனின் வாழ்க்கை ஏன் இவ்வளவு சிக்கிரத்தில்
முடியவேண்டும்? கேள்விகள் ஏராளம். உண்மையில் இச்சம்பவங்கள் எல்லாம் நம் நெஞ்சை பிளந்து
ஒருவித சோர்வுக்குள்ளாக்கி நம்மை கலக்கமடையச்செய்கிறது. எவ்வுளவுதான்
கேட்டாலும், என்னதான் யோசித்தாலும் எல்லா கேள்விகளும் நாம் பதில்களை பெற்றுக்கொள்ளவேமுடியாது.
வாழ்க்கையை படைத்தவனின் கேள்விக்கேட்க நமக்கு
என்ன அதிகாரம்? ஒரு துயரநிகழ்வு ஏற்றுக்கொள்வது
மிகக் கடினம். உண்மையின் நிதர்சனத்தை ஏற்றுக்கொள்ள
வாரங்கள், மாதங்கள், ஏன் வருடங்களும் செல்லலாம்.
ஆனாலும், காரியத்தின் காரணம் நமக்கு வெளிப்படும்முன், இருக்கிறவராகவே இருக்கின்ற
தேவனுடைய நன்மை, நம்பகத்தன்மை, உண்மை போன்றவைகளின்மேல்
நமக்குள்ள பற்றுறுதியை நாம் ஒருகாலும், ஒருபோதும் இழந்துவிடக்கூடாது. மரணத்தை
நம்மால் ஒரு தடுக்கமுடியாது போகலாம். நம்முடைய வாழ்க்கை தன் கையில் கொண்டவரின் மேல் நமக்குள்ள
கவனம் மற்றும் விசுவாசத்தை நாம் இழந்துவிடக்கூடாது.
இப்போதும் ஜீவனோடும், சுகத்தோடும் பெலத்தோடு இருக்கும்
நாம் (வியாதியிலிருந்து மீண்டோரும்) இனி என்ன ஆகுமோ என்ற யோசனையில் தங்கள் வாழ்க்கை
கழித்திடாமல், பின்வரும் சத்திய குறிப்புகளை தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு
நொடிபொழுதிலும் சிந்தித்து செயலாற்றவேண்டும்.
(1) இன்றைக்கும்
ஒரு புதிய நாளை, புதிய வாரத்தை தேவன் என் வாழ்வில்
கூட்டிக்கொடுத்தற்காக *ஆண்டவரை துதித்து ஸ்தோத்தரிக்கவேண்டும்* இருக்கிறவைகளுக்காக உளமாற கர்த்தருக்கு நன்றிசெலுத்தி,
இல்லாதவைகளுக்காக புலம்புவதை விட்டிடவேண்டும்.
(2) ஒரு
காரணத்தோடு, ஒரு நோக்கத்தோடு உங்கள் வாழ்க்கையை தேவன் நீட்டித்திருக்கிறார். *உங்களை குறித்த நோக்கம் என்னவென்பதை அறியுங்கள்*
(3) *நம்முடைய நாட்களின் தொகை எண்ணப்பட்டுள்ளது* என்பதை ஒத்துக்கொண்டு (தேவனுடைய
கணக்கின்படி) நம்முடைய நேரம் முடிவுக்கு வரும்போது நாமும்கூட எல்லைக்கோட்டை தொடவேண்டும்
என்பதை அறிந்துகொள்ளவேண்டும்.
(4) உங்களை சுற்றியுள்ள் மக்களுக்கு
ஒரு உதவியாளராக, பங்களிப்பவராக, ஆசீர்வாதமாக இருக்க தீர்மானியுங்கள். எவ்வளவு நாட்கள் வாழ்கிறோம்
என்பதல்ல, நாம் *எப்படி வாழ்கிறோம்* என்பதே முக்கியம்.
(5) ஒரு விசுவாசியின் இலக்கும் குறிக்கோளும்
பூமியில் தன் வாழ்நாட்களை எவ்வளவு காலம் நீட்டிக்கவேண்டும்
என்று இராமல், ஓட்டத்தை முடிக்கும்போது தேவன் வாக்குப்பண்ணியுள்ல
இன்னும் மேலான, மகிமையான, நித்தியவாழ்க்கைக்கு முன்னேறவேண்டும் என்று இருக்கவேண்டும். உங்கள் பயணம் அந்த முடிவை நோக்கி இருக்கட்டும்.
(ஜீவிக்கிறோம்..)
No comments:
Post a Comment