ஒரு
பழைய அல்பேனிய பொன்மொழி இப்படியாக செல்லுகிறது: முகம் ஒரு கவசமே, கவசத்தை தாண்டி பார்.
ஒருவேளை இன்றைக்கு அதனை எழுதுவோமானால், கவசத்தால்
மூடு முகத்தை, மூடாமல் தாண்டாதே வாசலை"
என்று இருக்கும் என்று இருக்கும் என்று நினைக்கிறேன்.
ஒரு
அற்புதமான, ஆச்சரியமான தேவனுடைய செயல் வெளிப்பட்டு பூச்சக்கரம் எங்கிலும் உள்ள இந்த நோய் அடியோடு ஒழிந்தாலேயொழிய, நான் நம்புகிறேன், வரும் நாட்களில் (வாரங்களில்,
மாதங்களில், வருடங்களில்) உலகத்தின் ஒழுங்கு இப்படித் தான் இருக்கப்போகிறது என்று. அரசனோ, ஆண்டியோ, நிங்கள் யாராக இருந்தாலும், முகத்தை
முகமூடியினால் மூடவேண்டும், மூன்று முழ தூரமாவது தள்ளியிருக்கவேண்டும்!
இந்நாட்களில்,
சார்பதிவாளரின் அலுவலத்தில் பணிபுரியும் அலுவரின் புகைப்படம் ஒன்றை இணையத்தில் கண்டேன்! சற்றே அதிர்ந்துபோனேன்! நவீனகால
சீருடையான, உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்
வரையில் மறைக்கும் ஆளுயர தனிமனித பாதுகாப்பு சாதனம் (அ) உடையை (PPE) அணிந்திருந்தார்கள். சற்றே அதிர்ந்துபோனேன்! இந்த அரசுபணியாளர்கள் பொதுமக்களை அன்றாடம் சந்திக்கவேண்டியுள்ளதால்,
இவர்களுக்கு தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம். வருங்காலத்தின் முன்ருசி இதுவோ என்றெண்ணி வியந்திட்டேன்.
பள்ளியிலிருந்து
கல்லூரிக்கு தேறின மாணவன் ஒருவன் தன் பெற்றோரிடம் இருசக்கர வாகனம் வாங்கித்தரவேண்டும்
என்று நச்சரித்துகொண்டே இருந்தான். வாங்குதிறன்
அவர்களுக்கு இருந்தாலும், வாங்கித்தர அவர்களுக்கு
மனமில்லை. அன்பு மகனின் ஓயாத வேண்டுதலுக்கு
ஒரு நாள் இணங்கி, அவனுக்கு ஒரு விலையேறப்பெற்ற புது வாகனத்தை பரிசாக அளித்தார்கள்.
சாவியை கொடுக்கும் முன் இரு நிபந்தனைகளை வைத்தார்கள். தலைக்கவசமின்றி வாகனம் எடுக்கக்கூடாது, தலைத்தெரிக்கும்
வேகத்தில் வாகனம் ஓட்டக்கூடாது. தலைக்காக்க
ஒரு விலைமிகுந்த தலைக்கவசத்தையும் (helmet) வாகனத்துடன் கொடுத்தார்கள். மகனும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு, தன் கனவு வாகனத்தை
பெற்றுக்கொண்ட சந்தோஷத்தில் மிதந்திட்டான்!
சில
மாதங்கள் உருண்டோடின. கோடையின் உச்சம். சிரத்தை காக்கும் கவசத்தை அணிவது சிரமமாகிவிட்டது
தம்பிக்கு. இதுவரையில் வாகனம் எந்த ஒரு விபத்தையும்
சந்திக்கவில்லையே என்று சாதனை, இப்போது சுதந்திர
காற்றை அனுபவிக்கலாமே என்ற வாஞ்சையை தூண்டியது.
ஒரு நாள் தன் தலைக்கவசத்திற்கு ஓய்வு கொடுக்க தீர்மானித்தான். கவசமின்றி வாகனத்தை வேகமாய் ஓட்டுகையில், முகத்தையும்
சிரசையும் முத்தமிடும் காற்றின் ஆழகை இன்பமாய் ரசித்துகொண்டே வீர்ரென்று விரைந்தான்
அவன் தன் வாகனத்தில், அனுதினமும்.
ஆனால்,
விதி யாரை விட்டது. இன்பச் சவாரி, ஒருநாள் அவனை
இக்கட்டில் கொண்டுவந்துவிட்டது. சூரியபிரகாசமான
நாளில், இந்த அருமை மகன், ஒரு திருப்பத்தை சமாளிக்கவு, ஒரு விபத்தை தவிர்க்கவும் முயற்சித்த
வேளையில், தன் சமநிலையை இழந்து சாலையின் இடையே
உள்ள டிவைடரில் மோதி கீழே விழுந்தான். வேகமாய்
அவன் இடிக்கவில்லை என்றாலும், இடித்த வேகத்தில் அவன் தலையில் காயம் ஏற்பட்டது. அய்யோ பரிதாபம்! அவன் பிழைக்கவில்லை. பெற்றோரின் அதிர்ச்சியை, கண்ணீரை, புலம்பலை, அழுகையை
வார்த்தையால் விவரிக்கமுடியாது. காவல் அதிகாரி தகப்பனின் தோளின்மேல் கையைப்போட்டு
சொன்னார், "சார், அவன் ஹெல்மேட் போட்டிருந்த கண்டிப்பா பிழைச்சிருப்பான். வண்டி கொடுத்த நீங்க, ஹெல்மெட் வாங்கித் தரக்கூடாதா"
என்று கேட்டார்.
தகப்பனின்
குமுறலை யாராலும் அடக்கமுடியவில்லை….
வருடம்
2020 (கொரோனாவுக்கு பின்). ஒரு அப்பா தன் மகனை பார்தது சொல்கிறார், "தம்பி,
mask போடாம போகாத…"
(தொடரும்…)
அருமையான விழிப்புணர்வு பதிவு
ReplyDeleteஇதிலே ஒரு ஆவிக்குரிய விழிப்புணர்வு செய்தி பொதிந்துள்ளது..அது வரும் நாட்களில் வெளிவரும்...
ReplyDeleteநன்றி!😊
Delete