இதயச் சலவை
(போதிக்கப்பட்டேன்….4/19)
இன்றைய தினத்தில் உலகத்தில் மிகவும் விலையேறப்பெற்ற பொருள் என்ற ஒன்று இருக்குமானால், அது பொன்னோ, வெள்ளியோ, வைரமோ, முத்தோ, வீடோ, வாகனமோ என்று இருக்கமுடியாது. தற்போதைய சூழநிலையில் அவைகளுக்கு உண்மையில் ஒரு மதிப்பு உள்ளதோ என்றும் தெரியவில்லை. பூச்சக்கரம் எங்கிலும் பரவி இலட்சக்கணக்கானோரை பாதித்து, ஆயிரக்கணக்கானோரின் உயிரை விழுங்கிக்கொண்டு வரும் பெருந்தொற்றிற்கு மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. பல நாடுகள் இதற்கு ஒரு தடுப்புமருந்தை கண்டுபிடிக்கவேண்டும் என்ற மும்முரமாய் இரவும் பகலும் ஆராய்ச்சிசெய்துவருகின்றன. ஒருவேளை அது கண்டுபிடித்தாகிவிட்டது என்றால், இன்று உலகத்தையே உலுக்கிக்கொண்டிருக்கும் பிரச்சனைக்கு ஒரு பெருந்தீர்வாக அமையும் அல்லவா? இன்னும் சொல்லப்போனால், இதனை வாங்குவதற்கு உலகத்தில் இருக்கும் மக்கள் எவ்வளவேனும் விலைக்கொடுத்து வாங்க முன்வருவார்கள்?
ஆம். தடுப்பு மருந்து என்று சொல்லும்போதுதான் நேற்று நம்முடைய பதிவில், ருமேனியா நாட்டைச் சேர்ந்த ரிச்சார்ட் உம்பிராண்டு எனும் தேவ ஊழியர் தன் வாழ்க்கையின் சந்தித்த brainwashing சித்திரவதையை எப்படி சமாளித்தார், அதற்கான தடுப்பு மருந்தை எப்படி கண்டுபிடித்தார் என்று கேட்டேன்? ஒரு நாளைக்கு 17 மணி நேரம் நம்முடைய காதுகளில் நாம் விரும்பாத, நம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒரு காரியம் தொடர்ந்து சொல்லப்பட்டுக்கொண்டே இருக்குமானால், நம்மால் எப்படி பொருத்துக்கொள்ளமுடியும்? அசாத்தியம்….
ஆனால், இதனை மேற்கொண்டு, இதிலிருந்து மீண்டு வந்து உம்பிராண்டு அவர்கள் தன்னுடைய சுயசரிதையில் பின்வரும் காரியங்களை எழுதுகிறார்:
_"அதை சமாளிப்பதற்கு ஒரே ஒரு வழிதானுண்டு. அது இதயச் சலவை (Heart Washing) தான். உன்னுடைய இதயமானது கிறிஸ்துவினுடைய அன்பினால் சுத்திகரிக்கப்படிருந்து அவரையே அது முழுவதுமாக நேசிக்குமானால். அப்போது எவ்வளவு பெரிய சித்திரவதைகளையும் நீ சமாளிக்க்கூடியவனாக இருப்பா. தன் நேச மணவாளனுக்கு, அவனை நேசிக்கும் மணவாட்டி எதையும் செய்ய்த் தயங்கமாட்டாள் அல்லவா? தான் நேசிக்கிற குழந்தைக்கு அதன் தாய் எதையாவது செய்யாமலிருப்பாளோ? தன்னுடைய கையில் குழந்தையாக இருந்த கிறிஸ்துவை நேசித்திருந்த மரியாளை போலவும், தன் மணவாளனை நேசிக்கும் மணவாட்டியைப்போலவும், தன் மணவாளனை நேசிக்கும் மணவாட்டியைப் போலவும், நீ கிறிஸ்துவை நேசிப்பாயானால், அப்போது நீயும் கிறிஸ்துவுக்காக, அவர் நிமித்தம் வரும் எந்தச் சித்திரவைதளையும் சகிக்கத் துணிவாய்.
கிறிஸ்துவுக்காக, நாம் சித்திரவதைகளை எந்த அளவுக்கு சகித்தோம் என்றல்ல, நாம் அவரில் எவ்வளவு அன்புகூர்ந்தோம் என்பதின்படியே தேவன் நம்மை நியாயந்தீர்க்கப்போகிறார். கம்யூனிச நாடுகளிலுள்ள சிறைச்சாலைகளில் சித்திரவதைகளின் மத்தியில் இருந்துவரும் கிறிஸ்தவர்கள், அந்தத் துன்பங்களின் மத்தியிலும் அவர்கள் தேவனை நேசிக்கமுடியும் என்பதற்குச் சாட்சியாகவே இன்று வாழ்ந்து வருகிறேன். அவர்கள் தேவனை மாத்திரமல்ல, மனிதரையும் நேசிக்கமுடியும்"_
நம்முடைய இருதயம் எவ்வளவு சுத்தமாக உள்ளது? அது சலவைசெய்யப்பட்டுள்ளதா?
Share your comments here...
ReplyDeleteUseful uncle. I needed it the most right now. Thank you uncle.
ReplyDeletePlease mention your name
DeleteThank you Anna for ur useful msg in this situation very interesting to read and waiting for the next msg .
ReplyDeletePlease mention your name
Delete"இதயச்சலவை" அருமையான பதிவு.... தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல.
ReplyDeleteரோமர்: 8-9
என்ற வசனத்தின் படி நாம் சாத்தானின் சோதனைகளுக்கு உட்படும்போது ஸ்தேவான், ரிச்சர்ட் உம் பிரண்ட் போல
வைராக்கியம் உள்ளவர்களாக, கிறிஸ்துவில் அன்புகூர்ந்த வர்களாக, கிறிஸ்துவைப் போல் வேத வசனத்தை கொண்டு 'எனக்கு எல்லாம் தெரியும்" என்று சாத்தானை துரத்துவோமானால் நமக்கு வெற்றி நிச்சயம்...
நன்றி