பார்ப்பவன் பிழைப்பான் (நற்செய்தி)
(போதிக்கப்பட்டேன் …6/19….தொடர்பதிவு)
இந்த நாட்களில், என்று உலகம் இந்த கொரோனோ பெருந்தொற்றைக் குறித்த அறிவிப்புகளையும், செய்திகளையும், எச்சரிப்புகளையும், கட்டுப்பாடுகளையும், நடவடிக்கைகளையும் தீவிரத்துடன் எடுக்க, பரப்ப துவங்கியதோ, அந்த நாட்களிலிருந்தே நீங்கள் World Health Organization அல்லது உலக சுகாதார நிறுவனம் என்று அழைக்கப்படும் ஒரு ஸ்தாபனத்தின் பெயர் அடிக்கடி சொல்ல கேள்விப்பட்டிருப்பீர்கள். பெருந்தொற்றை குறித்த புள்ளிவிவரங்கள், வழிகாட்டுதல்கள் மற்றும் உலகநாடுகள் இதனை எப்படி எதிர்கொள்ளவேண்டும், என்ன தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கவேண்டும், எப்படிப்பட்ட பாதுகாப்பு முறைமைகளை கடைபிடிக்கவேண்டும் போன்ற குறிப்புகளை இந்நிறுவனம் தொடர்ந்து வகுத்துவருகிறது. சர்வதேச நாடுகளும் WHO-வின் அறிவுறுத்தலின்படி நடவடிக்கைகளை எடுத்தும் வருகின்றன.
WHO நிறுவனத்தின் logo அல்லது சின்னத்தை உங்களில் எத்தனை பேர் கவனித்திருப்பீர்கள் என்று தெரியவில்லை? அதனை இந்த பதிவில் இணைத்துள்ளோம். உலகவரைப்படத்தின் பின்னணியில் ஒரு நீண்ட கொம்பு அல்லது தடியை ஒரு பாம்பு சுற்றிக்கொண்டு இருப்பதை போன்ற ஒரு படம் தான் உலக சுகாதார நிறுவனத்தின் சின்னம்? இது உங்களுகு எதை நினைவுபடுத்துகிறது இதன் பொருள் உங்களுக்கு தெரியுமா? தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன். ஆனாலும் அறியாதோருக்கு ஒர் நினைப்பூட்டல்.
அதற்கு முன் ஒரு சிலவேத வசனங்கள்…
_அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஒரு *கொள்ளிவாய்ச் சர்ப்பத்தின் உருவத்தைச் செய்து, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவை;* கடிக்கப்பட்டவன் எவனோ அவன் அதை நோக்கிப்பார்த்தால் பிழைப்பான் என்றார் (எண்ணாகமம் 21:8)_
_அப்படியே மோசே ஒரு வெண்கலச் சர்ப்பத்தை உண்டாக்கி, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவைத்தான்; *சர்ப்பம் ஒருவனைக் கடித்தபோது, அவன் அந்த வெண்கலச் சர்ப்பத்தை நோக்கிப்பார்த்துப் பிழைப்பான்*(எண்ணாகமம் 21:9)_
_*சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டது போல மனுஷகுமாரனும்,தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும்*(யோவான் 3:14,15)_
_நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, *பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்* (2 கொரிந்தியர் 5:21)_
ஏறக்குறைய 4000 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த ஒரு சம்பவத்தை தான் நாம் வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டு நூலாகிய எண்ணாகமம் என்ற நூலில் பதிவிட காண்கிறோம். இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்திரத்தில் முறுமுறுத்து தேவனுக்கும் மோசேக்கும் விரோதமாக பேசிதனதினாலே தேவன் கொள்ளிவாய் சர்ப்பங்களை ஜனங்களுக்குள் அனுப்பினார். அவைகள் ஜனங்களை கடித்ததினால் இஸ்வேலருக்குள் அநேகர் செத்தார்காள். ஆனாலும், ஜனங்கள் தங்கள் தவறை உணர்ந்து மோசேயிடம் சர்ப்பங்கள் எங்களை விட்டு நீக்கும்படி_கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணவேண்டும்_ என்றார்கள். மோசே ஜனங்களுக்காக விண்ணப்பம் பண்ணினான். அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி, நீ ஒரு கொள்ளிவாய்ச் சர்ப்பத்தின் உருவத்தை செய்து, அதை ஒரு கம்பத்தின் மேல் தூக்கிவை; _கடிக்கப்பட்டவன் எவனோ அவன் அதை நோக்கிபார்த்தால் பிழைப்பான் என்றார். அப்ப்டியே மோசே ஒரு வெண்கல சர்ப்பத்தை உண்டாக்கி, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவைத்தான்; சர்ப்பம் ஒருவனை கடித்தபோது, அவன் அந்த வெண்கல சர்ப்பத்தை நோக்கிபார்த்து பிழைப்பான்.
இந்த சம்பவம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவானவர் நமக்காக மரத்தில் தூக்கப்படும், சிலுவைமரத்தில் அடிக்கப்படும் ஒரு மாபெரும் நிகழவுக்கு நிழலாட்டாமாக, முன்னோடியாக உள்ளது. பாவமே அறியாத இயேசு எப்படி பாவமானாரோ, அதேபோல் பாவத்தின் கூர், பாவத்தின் வேர், பாவத்தின் ஆதாரம், மற்றும் பாவத்தின் விளைவு போன்றவைகளின் அடையாளமாக இருக்கும் சர்ப்பத்தின் உருவிலான அந்த வெண்கல வடிவத்தை பார்க்கும்போது அவர்கள் ,சாகாமல் பிழைத்தனர்.
பாவத்தின் கோரப்பிடியில் மாட்டிக்கொண்டு அதன் சம்பளமாகிய நித்திய மரணத்தை எதிர்நோக்கும் மக்களுக்கு நித்திய வாழ்வை கொடுக்கவே இயேசுவானவர் நாம் செய்த பாவத்திற்கான பரிகார பலியாக சிலுவையில் உயர்த்தப்பட்டார். அன்று அந்த சிலுவையில் தொங்கின இயேசுவை பார்த்த கள்வன் மோட்சபாக்கியத்தை பெற்றான். ஆம் இந்த படத்திற்கு பின்னால் மறைந்திருக்கும் மெய்யான நற்செய்தி இதுதான். அன்று அக்கானகத்தில் ஒரு குறிப்பிட்ட மக்களின் ஜீவன் காக்கப்படுவதற்கு கர்த்தர் ஒரு வெண்கல சர்ப்பத்தை ஏற்படுத்தினார். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக உலகம் முழுவதிலும் பாவம் என்கின்ற கொள்ளிவாய் சர்ப்பத்தினால் கடிக்கப்பட்டு மரணம் என்கின்ற நித்திய நியாயத்தீர்ப்பை எதிர்நோக்கும் மக்களுக்கு தேவன் உண்டுபண்ணின ஒரு ஏற்பாடு, ஒரு பரிகாரம் ஆண்டவராகியே இயேசுவின் சிலுவை மரணம்! இன்றும் அவரை நோக்கி பார்ப்பவர்கள் பிழைக்கிறார்கள்!
கொரோனாவை தடுக்க, ஒழிக்க, மேற்கொள்ள வேறு எந்த மருந்தும்
கண்டுபிடிக்கப்படவில்லை…..சமூக விலகல் மற்று தனிமைப்படுத்தல் தான் ஒரே வழி என்கிறது உலக சுகாதார நிறுவனம். ஆனால், அந்நிறுவனத்தின் சின்னம் நமக்கு ஒரு ஆழமான வேறொரு செய்தியை அறிவிக்கிறது. பாவம் என்கின்ற தொற்றுநோயை ஒழிக்க, மேற்கொள்ள, ஜெயிக்க வானத்தின் கீழூம் பூமிக்கு மேலும் வேறு எந்த உபாயமும் கண்டுபிடிக்கப்படவில்லை…..சரவேஸ்வரன் இயேசுவை அண்டிக்கொள்வதே ஒரே வழி…சிலுவையில் உயர்த்தப்பட்ட அவரை நோக்கி பார்ப்பவன், அவரளிக்கும் மன்னிப்பை பெறுவான், அவரை சொந்த இரட்சகனாக ஏற்றுக்கொள்கிறவன் பிழைப்பான். பூமியில் பிழைப்பது மாத்திரமல்ல, அவனுடைய அத்துமா நித்திய வாழ்வையும் கண்டடையும். இதுவே சத்திய சுவிசேஷம்!
*சிந்திக்க* இங்கே, தேவன் மோசேயின் விண்ணப்பத்தை கேட்டு ஒரே நொடியில் வாதையை நிறுத்தவில்லை. ஒவ்வொரு தனிநபரும் ஒரு விசுவாச செயலை செய்ததினாலேயே (சர்ப்பத்தை நோக்கி பார்த்தது) அவர்கள் சுகத்தை பெற்றுக்கொண்டார்கள். உண்மையில் அதன் பொருள் என்னவென்றால், வெண்கல சர்ப்பம் அவர்களுக்கு மீட்பை கொடுக்கவில்லை. அவர்கள் தங்கள் கண்களை உயர்த்தி தங்கள் இருதயத்தை பரமபிதாவுக்கு நேராக திருப்பினதினாலேயே பிழைத்தார்கள்!
இன்றும் இயேசுவை அறியாதோர், நமக்காக சிலுவையில் அறையப்பட்ட அவரை நோக்குவார்களேயானால், அவர்களுக்கு இம்மையில் நிம்மதி. மறுமையில் நித்திய வாழ்வின் நிச்சயம் உண்டு என்பதில் சந்தேகமில்லை!
கொரோனாவை பரப்புவது தான் குற்றம்…இந்த நற்செய்தியை பரப்புவது குற்றமாகாது..ஒருவேலை பரப்பாமல் இருப்பதினால் நம்மேல் குற்றம் சுமரலாம்!!(2 இராஜாக்கள் 7:9)
..தொடரும்
பரப்புவேன் நற்செய்தியை, பகிறந்துவிட்டேன் இச்செய்தியை. ஏசுவை பார்த்து பிழைத்தோம், இயேசுவை காட்டி அழைப்போம்☺️
ReplyDelete