Friday, April 17, 2020

தன் வாயைத் திறந்து....(போதிக்கப்பட்டேன்...ஓர் தொடர் பதிவு) (3/19)

தன் வாயை திறந்து…
(போதிக்கப்பட்டேன்…..ஓர் தொடர் பதிவு) (3/19)*

எந்த சூழ்நிலையிலும் 'இது எனக்கு தெரியும்' என்று நாம் சொல்ல அறிந்திருக்கவேண்டும் என்று ஒரு பரிசுத்தவான் போதித்ததையும், அதன்படியே அவர் வாழந்ததையும் குறித்து நான் நேற்று பதிவிட்டேன்….அவர் யார் என்று அறிந்துகொள்ள சிலர் ஆர்வம் காட்டியுள்ளனர்…சிலர் யார் என்பதை யூகித்தும் இருப்பர்….ஆம் உங்களில் சிலர் சரியாக அனுமானித்ததுபோல், அவர் காலஞ்சென்ற பாஸ்டர். G. சுந்தரம் அய்யா அவர்களே……அவரை குறித்து விவரமாக பேச இப்போது நாம் நேரம் எடுக்கவில்லை….

இன்று வீடெங்கும், ஊரெங்கும், நாடெங்கும் பேசப்படும், சொல்லப்படும், எழுதப்படும் ஒரு வார்த்தை என்னவென்று கேட்டால்….எளிதில் சொல்லிவிடுவீர்கள் அது என்னவென்று…..என் மூச்சு, பேச்சு எல்லாமே இயேசு என்று ஒரு பாட்டு கேட்ட ஞாபகம்…ஆனால், இன்றைக்கு ஊரின் மூச்சு, பேச்சு எல்லாமே கொரோனாவாக போய்விட்டது…..ஊடகங்களில் இந்த செய்தியை தவிர வேறு எந்த செய்தியையும் கேட்கமுடியவில்லை…உலகமுழுவதிலும் இது வியாபித்துள்ளதால் வேறு எந்த செய்தியும் இருப்பதாகவும் தெரியவில்லை….புரிந்தோ புரியமலோ, நம்முடைய பேச்சும், பதிவுகளும், எழுத்துக்களும்..இதை பற்றியே…இதனை சுற்றியுள்ள காரியங்களை குறித்தே காணப்படுகின்றன…அது ஆராய்ச்சியானாலும் சரி, ஜெபமானாலும் சரி, பிரசங்கமானாலும் சரி…

ருமேனியா தேசத்தை சேர்ந்த ரிச்சார்ட் உம்பிராண்டு என்பவரை குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள்…1945 ஆண்டில் அவருடைய நாடு கம்யூனிஸட் கட்சியினர் கையில் வந்ததும் கிறிஸ்தவ ஊழியர்கள் சொல்லொன்னா பாடுகள், சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டார்….அந்த நாட்களில் இவர் ஏறக்குறைய 14 ஆண்டுகள் கொடும் சிறைவாசத்தையும், சித்திரவதையையும் அனுபவித்தார்…..கிறிஸ்துவை மறுதலிக்கவேண்டும்  என்று அவர்கள் உட்படுத்தின் சித்திரவதைகளில் மிகவும் பயங்கரமான சித்திரவதை:

கம்யூனிசம் நல்லது!
கம்யூனிசம் நல்லது!
கிறிஸ்தவம் முட்டாள்தனமானது!
கிறிஸ்தவம் முட்டாள்தனமானது!
அதைவிட்டுவிடு
அதைவிட்டுவிடு

என்ற வார்த்தைகளை இந்த சிறைகைதிகள் கேட்டுக்கொண்டேயிருக்கவேண்டும்.  நாள்கணக்கில், மாதக்கணக்கில், ஒரு நாளுக்கு 17 மணி நேரங்கள் இது அவர்களின் காதுகளில் உரக்க சொல்லப்படும்.  இதை தான் மூளைச் சலவை (brain washing) என்பார்கள்.  உண்மையில், நம்முடைய காதுகளில் இப்படிப்பட்ட காரியங்கள்,  ஒரு நாள் முழுக்க சொல்லப்படுகிறது என்று  வைத்துக்கொள்வோம்.  நம்மால் ஒரு நாளை தாக்குப்பிடிக்கமுடியுமா என்று தெரியவில்லை? கஷ்டம் தான்….ஆனால் இந்த ஊழியர் பல ஆண்டுகள் இந்த சித்திரவதையையும் சகித்து கிறிஸ்துவின் மேல் கொண்ட விசுவாசத்திலும் வழுவாமல் இருந்தார் என்பது சரித்திரம்…

வேதத்தில் 'தன் வாயைத் திறந்து'  பேசத் தொடங்கின இருவரை குறித்த சாட்சியை நாம் கவனிக்கிறோம்.  இந்த பட்டியிலில் இருவருக்கும் அதிகமானோர் உண்டு. ஆனாலும் இவர்களிடமிருந்து நாம் ஒரு பாடத்தை கற்றுகொள்கிறோம்.   ஒருவர் உபத்திரவங்களின் உச்சத்தை தொட்ட யோபு.  இன்னொருவர் உபத்திரவங்களை  ஜெயித்தேன் என்று அறிக்கையிட்ட இயேசு.

யோபு தன் வாயைத் திறந்து தன் பிறந்தநாளை சபித்து.. ( யோபு 3:1)  இயேசு தன் வாயைத் திறந்து உபதேசித்து சொன்னது ..(மத்தேயு 5:2)

நம் வாய் சபிக்கிறதா, உபதேசிக்கிறதா?

தொற்றின் பெருக்கம், ஊரடங்கின் நீட்டிப்பு, தொடரும் சாவுகள், பொருளாதார பிரச்சனைகள், ஏழைகளின் அவலங்கள்….இவைகளை கேட்டுக்கொண்டிருக்கும் நம் காதுகள்….நம் மூளை….எப்படியாக பேசுகிறது….எதை சிந்திக்கிறது….

நாம் நினைத்துப்பார்க்கமுடியாத முளைச்சலைவைக்கு உள்ளான உம்பிராண்டு இதனை எப்படி சமாளித்திருப்பார் என்று தெரியுமா? அதற்கு அவர் பயன்படுத்தின ஒரு மாற்று மருந்து என்னவென்று தெரியுமா?  அவர் கண்டுபிடித்த தடுப்பு மருந்தின் பெயர் அறிய விரும்புகிறீர்களா?


                                                                                                                                                       தொடரும்….

3 comments:

  1. அருமையான தொடர் பதிவு.மேலும், சுவாரஸ்யத்துடன் பதிவை தொடர்வது எங்களை மேலும் உற்சாகமாக படிக்க தூண்வது பாராட்டுதற்குரியது.
    Praise the Lord.Thank you brother🙏...from Sr.Sophia via WhatsApp

    ReplyDelete
  2. அவனவன் இருதயத்தின் நிறைவினால்.....

    வார்த்தை மாமிசமானால்.......

    இது சாத்தியம். From Sr.Rosalind John

    ReplyDelete

I WILL COME | PROMISE | GOD'S SHADOW MINISTRIES | MARCH 2025

  I WILL COME AND HEAL HIM PROMISE | MARCH 2025 Mat hew 8:7   And Jesus saith unto him, I will come and heal him   Dearly beloved...