*போதிக்கப்பட்டேன்…..* _ஓர் தொடர் பதிவு (1/19)_
ஊரடங்கின் 21-ஆம் நாளான நேற்று காலை, இதன் காலம் மேலும் 19 நாட்களுக்கு நீட்டிக்கப்படுகிறது என்ற அறிவிப்பு, எதிர்பார்த்ததுபோல், வந்துவிட்டது…ஆக தற்போதைக்கு இது 40 நாட்கள் என்ற நிலையை எட்டியுள்ளது …40-தும் ஏதோ ஒன்றினை நமக்கு நினைவுபடுத்துகிறது அல்லவா? சீனாய் மலையில் மோசே, வனாந்திரத்தில் இயேசு…..
ஒரு பக்கம், இது நாம் எதிர்பார்த்த ஒன்று தானே…இதிலே என்ன புதுசு என்ற ஆங்கலாய்ப்பு….இன்னொரு பக்கம், இன்னும் 19 நாளா என்ற தவிப்பு….மற்றொரு பக்கம், சரி என்ன செய்வது, இதுதானே வழின்னு சொல்றாங்க….மூன்று வாரம் இருந்திடுவோம் என்ற சகிப்பு. இன்னும் கொஞ்ச நாள் தானே தாக்குப்பிடிப்போம்…சமாளிப்போம் என்ற உணர்வுகள். இன்னும் சிலர், கடந்த 21-நாள் என்னனவோ செய்யவேண்டும் என்று முடிவுசெய்தேன்…ஆனால், ஒன்னும் நடக்கலை…சரி இப்ப மீதம் இருக்கிற நாட்களையாவது நாம் பயன்படுத்துவோம் என்று ஒரு சிந்தைவேகம்…..
மனநிலைகள், மனஉணர்வுகள், உள்ளத்தின் தீர்மானங்கள், பார்வைகள் ஒருவருக்கு ஒருவர் வேறுபட்டாலும் சில அடிப்படை உண்மைகளை, அதுவும் கசப்பான, கண்கலங்கவைக்கும் நிதர்சனங்களை நாம் மறுக்கமுடியாது…..
அன்றாட உழைப்பை அனுதின வியாபாரத்தை நம்பி தங்கள் வயிற்றுப் பிழைப்பை நடத்துவோர் இந்தியாவில் 60% என்று ஒரு தகவல் ஊட்கத்தில் விவாதிக்கபட்டது என் காதில் விழுந்தது…இவர்களுடைய அன்றாட வாழ்க்கை…இல்லை இல்லை அடுத்த நிமிட வாழ்க்கை….எதை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது….எங்கே போய்முடியும்…என்ற கேள்விகளுக்கான விடைகள் நம்மை அச்சத்தில் ஆழ்த்துகின்றன…தொற்றிலிருந்தும் தப்பவேண்டும் வயிற்றையும் நிரப்பவேண்டும் என்பது ஒரே நேரத்தில் வடதுருவத்தில் ஒரு கால் தென்துருவத்தில் ஒரு காலை வைக்கும் சாகசத்தை போலத்தான் தோன்றுகிறது….
பெருந்துதொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்களை செய்திஊடகங்கள் நிமிடத்திற்கு நிமிடம், கிரிக்கெட் ஓட்டத்தின் வர்ணனையை போல் ஒலிபரப்ப தவறுவதில்லை. எண்ணிகை ஏறுகிறதே ஓழிய, குறைந்தபாடில்லை! மேலெழும்பிக்கொண்டிருக்கும் வளைவுகோடு எப்பொழுது இறங்குமோ புரியவில்லை!
ஆயிரங்களை தொட்டது இலட்சங்களை எட்டக்கூடாது என்ற நல்லெண்ணம், கோடிகளை பொருளாதார குறைவு எனும் தொற்றுக்குள் …சேற்றுக்குள்….அகப்படுத்தியுள்ளது ஓர் நிதர்சனமான உண்மை.
இந்த 19 நாட்கள் (அல்லது அதற்கும் மேலானதொரு காலம்) நமக்கு வேதனையை கூட்டும் நாட்களாக இருக்கபோகிறதா? அல்லது வரப்பிரசாதமாக அமையுமா? உங்கள் பார்வை என்ன?
_தொடரும்_

கருத்தும் பார்வையும் வரவேற்கப்படுகிறது...
ReplyDelete