Sunday, April 19, 2020

வார்த்தையும் வாதையும் (போதிக்கப்பட்டேன்...5/19...ஒர் தொடர்பதிவு)

வார்த்தையும் வாதையும்
(போதிக்கப்பட்டேன் ….5/19)

அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார் என்ற வேதப்பகுதியை (சங்கீதம் 107:20) இந்த நாட்களில் நாம் அதிகமாய் நினைவுகூருகிறோம், தியானிக்கிறோம், ஜெபிக்கிறோம்….… அன்று வெளிச்சம் உண்டாகக்கடவது என்ற வசனத்தை அனுப்பினார்….அது அப்படியே ஆயிற்று……அன்று அந்த நூற்றுக்கு அதிபதி இயேசுவை பார்த்த நீர் ஒரு வார்த்தை சொல்லும் வேலைக்காரன் சொஸ்தமாவான் என்றான்….அதேபோல் அவர் சொன்ன..அல்லது அனுப்பின் வார்த்தையின்படியே வேலைக்காரனுக்கு ஆயிற்று(மத்தேயு 8).. அன்று ஆக்ரோஷமாய் ஆட்டம்போட்ட கடலையும், காற்றையும் பார்த்து இயேசு 'இரையாதே, அமைதலாயிரு' என்று ஒரு வார்த்தையை சொல்லி ..அனுப்பி…அதட்டினார்….அது அப்படியே ஆயிற்று….அன்று உன் படுக்கையை எடுத்துகொண்டு நட என்று ஒரு வார்த்தை உதித்தார்…அது அப்ப்டியே ஆயிற்று……இயேசு மட்டுமா…இயேசுவின் சீடர்கள் அலங்கார வாசலில் அலங்கோலமாய இருந்த முடவனை பார்த்து 'இயேசுவின் நாமத்தில் நட' என்றார்கள்….அது அப்படியே ஆயிற்று…..இப்படி வார்த்தையின் வல்லமையை நாம் பட்டியிலிட்டுக்கொண்டே போகலாம்…

இயேச பேசின வார்த்தைகள் மட்டுமா? இயேசுவை பற்றி எழுதப்பட்ட வேதவார்த்தைகளிலும் வல்லமை உண்டு என்பதை நாம் அறிந்திருக்கிறோம்….மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்தில் உண்டாம்…..இருதயத்தின் நிறைவினால் நாவு பேசுமாம்……..எல்லா காவலோடும் நாம் நம் இருதயத்தை காத்துகொள்ளவேண்டும், ஏனென்றால்  அவைகளினின்று ஜீவ ஊற்று புறப்படுகிறதாம்…..சங்கீதகக்கரன் ஜெபிக்கிறான்,  என் வாயின் வார்த்தைகளும் என் இருதயத்தின் தியானமும் உம்முடைய சமூகத்தில் பிரிதியாக இருக்கவேண்டும்…..வாய்க்கும் இதயத்திற்கும் ஒரு தொடர்பு உண்டல்லவோ?

இன்றும் நாம் பரவலாக ஏறெடுக்கும் ஒரு ஜெபம், ஆண்டவரே 'வாதை நிறுத்தப்பட்டது' என்ற ஒரு வார்த்தை அனுப்பமாட்டீரா?   ஒருவேளை தேவனால் இந்த வாதை அனுப்பட்டிருக்குமானால், அதை நிறுத்துவதற்கு நமக்கு அதிகாரம் இல்லையே?  அப்படியானால்…அவர் ஒரு வார்த்தை சொன்னால், வாதை முடிவுக்கு வரும்….நூற்றுக்கு அதிபதி  கெஞ்சியது போல் நாமும் கெஞ்சவேண்டியதை தவிற வேறு வழி உண்டோ?




வாய், வார்த்தை, வாதை….இந்த மூன்று வார்த்தைகளுக்கு இடையே உள்ள தொடர்பை நான் இன்று சிந்தித்துக்கொண்டிருந்தேன்….ஒரு சுவாரஸ்யமான காரியம் எனக்கு தோன்றியது…..வெளிப்பாடு என்று சொல்லமாட்டேன்…ஒரு பார்வை…ஒரு கோணம்….நம் சிந்தனைக்கும்…நம் பக்திவிருத்திக்கும்..

*வாய்* - நம்முடைய இருதய்த்திலிருந்து புறப்பட்டு வரும் சிந்தனைகளுக்கு வடிவம் கொடுக்கும் ஒரு வாகனமாக நான் பார்க்கிறேன்…

*வார்த்தை* - பொதுவாக 'இயேசுவை' குறிக்கக்கூடிய ஒரு பதமாகவும் உள்ளது……நம்முடைய வாயிலிருந்து ஜீவவார்த்தையானவர் வெளிப்படுவாரானால்….நம்முடைய இருதயத்தின் நிறைவிலிருந்து வார்த்தையின் ஆண்டவர் வெளிப்படுவாரானால்…..என்ன நடக்கும்?

*வாதை*  -  வார்த்தை  என்ற சொல்லின் நடுவில் இருக்கும்  'ர்' மற்றும் 'த்' என்ற இரண்டு மெய் எழுத்துக்களை எடுத்துவிட்டால் அது வாதையாக மாறிவிடுகிறது……மெய் என்றால் உண்மை…சத்தியம்… …..கர்த்தர் என்ற வார்த்தையின் நடுவில் இருப்பதும் இந்த இரண்டு மெய் எழுத்துக்களே…….ஒருவேளை நம்முடைய் வாயிலிருந்து…..நம்முடைய இருதயத்திலிருந்து… நம்முடைய வாழ்க்கையின் மையத்திலிருந்து….கர்த்தர் எடுக்கப்படுவாரானால்…சத்தியம் எடுக்கப்படுமானால்….இயேசு எடுக்கப்படுவாரானால்…..வாதை வந்துவிடுமோ என்ற எண்ணத் தோன்றுகிறது?

நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன் (சங்கீதம் 119:1)
நம்முடைய இருதயத்திற்குள் நாம்  எட்டிப் பார்க்வேண்டும்…..இப்போது அதில் என்னதான் ஒளிந்துள்ளது?                                                                                                                                                                      ...தொடரும்

5 comments:

  1. Replies
    1. I enjoing this gods word anna i praise god poongothai

      Delete
  2. This article is an eye opener anna.-Lydia

    ReplyDelete
  3. Praise God thought processing
    From Santhosh K Bangalore

    ReplyDelete
  4. அருமையான செய்தி அண்ணா, உங்கள் சிந்தனையும் சிறப்பு - Jepthah

    ReplyDelete

I WILL COME | PROMISE | GOD'S SHADOW MINISTRIES | MARCH 2025

  I WILL COME AND HEAL HIM PROMISE | MARCH 2025 Mat hew 8:7   And Jesus saith unto him, I will come and heal him   Dearly beloved...