அவர் கண்ணீர்விட்டார்…
(போதிக்கப்பட்டேன்…தொடர்பதிவு…7/19)
வேதாமத்தில் யோவான் 11:35 தான் இருப்பதிலேயே மிகச் சிறிய வசனம் என்று பொதுவாக சொல்வதுண்டு. இந்த வசனத்திலே இரண்டே வாக்கியங்கள்: இயேசு கண்ணீர்வீட்டார். சிறிதானாலும், இந்த வசனம் நமக்கு ஒரு செம்மையான, ஒரு ஆழமான, ஒரு மேன்மையான செய்தியை எடுத்துச்சொல்லுகிறது என்று நான் நம்புகிறேன். இன்றைக்கும், அநேகருக்கு இந்த காட்சி ஒரு புரியாத புதிராகவே உள்ளது. அண்டசராசரங்களை படைத்தவரும், ஜிவன் மற்றும் மரணத்தின் அதிகாரியுமானவர் (தேவகுமாரன்) மரித்தவனை உயிரோடு எழுப்பப்போகிறோம் என்பதை நன்கு அறிந்தவர் ஏன் அழவேண்டும்?
இந்த சம்பவத்திற்குள், இந்த சூழவமைக்குள், இந்த காட்சிக்குள் நான், உங்களோடுகூட, சற்று ஆழமாக, வரும் நாட்களில், பயணிக்க விரும்புகிறேன். நம் அருமை இரட்சகரின் கண்களில், அந்த குறிப்பிட்ட நாளில, கண்ணீர் வந்ததற்கான காரணம் என்னவோ என்று புரிந்துகொள்ள விழைகிறேன்.
பொதுவாக, நம்முடைய கலாச்சாரத்தில், அழுகை அல்லது அழுவது ஒரு பெலவீனத்தின் அடையாளம் என்று நினைக்கிறார்கள். உறுதிகொண்ட மக்களின் கண்கள் ஒருபோதும் குளமாகாது என்பது அவர்களின் தத்துவம். முதிர்ந்த் மனிதன் கண்ணீர் சிந்திடான். அவன் தன் உணர்ச்சிகளை கட்டுபடுத்த அறிந்தவன். அழுவதும் புலம்பவதும் மகளீருக்கு கைவந்த கலை என்பது அவர்கள் கருத்து. சூழ்நிலை என்னதான் கவலைக்கிடமான, துக்கத்திற்குரிய ஒன்றாக இருந்தாலும், நாம் வெடித்து குமுறாமல், நம்முடைய கண்ணிரை மறைக்க அல்லது கட்டுப்படுத்த அறிந்திருக்கவேண்டும் என்று நாகரிக கலாச்சாரம் நமக்கு போதிக்கிறது. ஆனால் இங்கேயோ, வானத்தையும் பூமியையும் படைத்த ஆண்டவரின் கண்கள் கலங்கிவிட்டன. அதுவும் தன் ஒரே சகோதரனை இழந்த சகோதரியை பார்த்து கண்ணீர் விடுகிறார். உயிர்த்தெழுதலின் அற்புதம் ஒருபக்கம் இருக்கட்டும், (வாழ்வின் ஆக்கியோன்) இயேசுவுக்கு, மரணத்தின் நிதர்சனம் தெரியாதா? பிறந்தோர் யாவரும் மரிக்கவேண்டும் என்பதை அவர் அறியாரோ? அப்படியானல் கண்கள் பனித்ததற்கான காரணம் என்ன? அன்று அவரை பார்த்தவர்களும் கேட்ட கேள்வி நியாயமான ஒன்று. இவர் அவனை அவ்வளவாய் நேசித்திருக்கிறாரே, என் இவனை மரிக்காமல் காப்பாற்றியிருக்கலாமே? மரணப்படுக்கையில் இருந்த அவனை சுகப்படுத்தும் வல்லமை அவருக்கு இல்லாமல் போனதோ? அல்லது அன்று நூற்றுக்கு அதிபதியின் வேலையாளுக்கு செய்தததுபோல், ஒரு வார்த்தையை அனுப்பி இவனை உயிர்பிழைக்க செய்யும் அதிகாரம் அவரிடத்தில் பறிக்கப்பட்டதோ?
ஆனால் இயேசுவோ, இவன் மரிக்கும் வரை வரவிலை. இன்னொரு வார்த்தையில் சொன்னால், சகோதரிகளின் அபயக்குரலுக்கு அவரின் பிரதிஉத்தரவு அவன் மரித்து அடக்கம்பண்ணப்பட்டு நான்கு நாள் ஆகும் வரையில் தாமதமானது. அவர் அழுவதற்கான காரணம் என்ன? நீங்கள் சொல்லுங்களேன்?
இரண்டு நாட்களுக்கு முன், கொரோனா பிணியாளுக்கு சிகிச்சையளித்து வந்த நரம்பியல் நிபுணர் ஒருவர் மரித்த செய்தி ஊடங்கங்களை ஆக்கிரமித்தது. அவருடைய மரணம் ஒரு கொடிய சம்பவமே ஆனாலும், அவருடைய உடலை அடக்கம்செய்வதற்கென்று நியமித்திருந்த கல்லறையின் குடியிருப்பிலிருந்து எழுந்த எதிர்ப்பும், கொதிப்பும், வன்முறையும் உண்மையில் ஜீரணிக்கமுடியாத ஒன்று. மருத்துவ சமுதாயம் தன் கோபத்தையும், மனிதஉரிமை காவலர் தங்கள் கண்டனத்தையும் மிகுதியாய் பதிவிட்டாலும், அன்னாருக்கு எற்பட்ட கனவீனம் தவிர்த்திருக்கவேண்டிய ஒன்று. ஒரே வாரத்தில் இரண்டு மருத்துவர்கள், போர்முனையில் எதிரியுடன் போராடி வீரமரணம் அடைந்த சிப்பாய்களைப் போல், கொரனோவுக்கு சிகிச்சையளித்துக்கொண்ட வீரமரணம் அடைந்துள்ளனர். கொடுமை என்னவென்றால், இவர்களின் தியாகத்திற்கு ஒரு கண்ணியமான அடக்கமும் இல்லாமல் போய்விட்டது. எதிர்பாளர்களின் செயலை சாடுவோர் ஒருபக்கம் இருந்தாலும், மக்கள் மனதில் இந்த கொள்ளைநோயினால் உண்டான (அல்லது உண்டாக்கபட்டுள்ள) பீதியை யாரால் கட்டுப்படுத்த அல்லது குறைக்கமுடியும்? மரித்த மருத்தவ வீரனின் தோழன் ஒருவர் பதிவிட்ட காணோளி பதிவில் கண்ணீர்மல்க இச்சம்பவத்தை கண்டித்ததோடு, இப்படி மருத்துவபோர்முனையில் அனுதினமும் போராடிக்கொண்டிருக்கும் அன்பர்களின் உயிரையும, மாண்பையும் காக்கும்படிக்கு கெஞ்சியுமுள்ளார்.
ஆம். உண்மையில் இது வேதனையளிக்கிறது. ஆனால் இதற்கு யோவான் 11:35-க்கும் என்ன தொடர்பு? (தொடரும்….)
இரண்டிற்கும் உள்ள ஒற்றுமையை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்
ReplyDeleteஆரம்பத்திலிருந்தே உங்களிடமிருந்து வரும் அனைத்து குறுஞ்செய்திகளும் சற்று பெரியதாக வே எனக்கு தெரியும், ஆனால் தொடர்ந்து உங்களிடம் இருந்து வரும் செய்திகளை பார்க்கிறபோது உங்கள் உழைப்பை யோசிக்கிறேன். இரு மொழிகளை பல விடயங்களை பல சமூக வலைதளங்கள் மூலம் பதிவிடுவதை விட 5நிமிடம் நேரம் எடுத்து படிப்பது கடினமல்ல.
ReplyDeleteபடிக்கமலிருந்தால் நான் பெற்றுக்கொள்ளும் செய்தியில் உள்ள உழைப்பை அசட்டை செய்ததாகிவிடுமோ என்றும் யோசிக்கத்தோன்றுகிறது.
நன்றி
அருமையான பதிவு அண்ணா
Delete