அழுக்கு
வெள்ளை சட்டை
என்ன பரிதாபம்? என்ன கொடுமை?
என்ன அவலம்? என்ன அநியாயம்?....இறந்துபோன நரம்பியல் மருத்துவரின் மனைவி சமீபத்தில்
பதிவிட்ட காணோளியில் தன் கணவனின் உடலை அட்க்கம்
செய்வதற்கு அவர் விரும்பின இடமளியுங்கள் என்று கையேந்தி வேண்டும் காட்சி நம் உள்ளத்தில்
எழுப்பும் கேள்விகள் இவைகள்…..இழப்பின் துக்கமே பேரிடியாய் இருக்கையில்….இறந்தவருக்கு
இடம்தேடி அழும்நிலை உண்டாயிருப்பது….இதயத்தை ஈட்டியினால் குத்துவதுபோல் அல்லவோ உள்ளது.
பெத்தானி …2000 ஆண்டுகளுக்கு
முன்
எல்லாம் முடிந்தபிறகு "அவனை
எங்கே வைத்தீர்கள்" என்று இயேசு கேட்பது, சகோதரிகளுக்கு வியப்பை உண்டாக்கியிருக்கும்.
ஒருவேளை உயிர்நீத்த தன் சகோதரனுக்கு அஞ்சலி செலுத்தவும், தங்கள் துக்கத்தை பகிர்ந்துகொள்ளவும்
இவர் கல்லறையை காணவிரும்புகிறாரோ? இயேசு எந்த
இடத்தில், எந்த கட்டத்தில், கண்ணீர் விட்டார் என்ற விவரத்தை வேதம் கூறவில்லை.
லாசருவின் மரணத்தை குறித்த
செய்தி ஒரு நான்கு நாட்களுக்கு முன்பாகவே அவரை எட்டியிருந்தது. அந்த செய்தியை கேட்டதும் இயேசு கண்ணீர் விட்டதாக
வேதம் கூறிப்பிடவில்லை, துக்கம் நிறைந்த மார்த்தாள்
மற்றும் (கல்லறையின் அருகே சத்தமாய் அழுத) மரியாளின் முகம் கண்டு அவர் கண்கலங்கவில்லை…
நான் நினைக்கிறேன் இயேசு லாசருவின்
கல்லறையின் முன் வந்ததும் கண்ணீர் விட்டிருப்பார் என்று. ஏன்? கண்ணீர்
விடும் அளவுக்கு அங்கு என்ன நடந்துவிட்டது?
வேறொரு சமபவத்தில், வாலிபன் ஒருவனின் பாடையை சுமந்துசென்றுகொண்டிருந்த கூட்டத்தில் மகனை இழந்த தாயின் கண்ணீரைக் கண்டு
மனதுருகின ஆண்டவர், "ஆழாதே" என்று அவளிடம் சொன்னாரே ஒழிய, தான் அழவில்லை.
ஆனால் இங்கோ? ஒருவேளை அவர் இந்த குடும்பத்தை
மற்ற எலலாரைக் காட்டிலும் அதிகமாக நேசித்திருப்பாரோ? தேவனுடைய குமாரனாகிய இவரிடத்திலும் பட்சபாதம் இருக்கலாகாதே! அவர் எல்லோரையும் ஒரேவிதத்தில் அல்லவோ அன்புகூறவேண்டும்!
அவருடைய மனதுருக்கம் எல்லோருக்கும் சமமானதன்றோ?
அப்படியானால், இயேசுவின் இருதயத்தை உருக்கின காரியம் தான் என்ன?
நான் நினைக்கிறேன்…
கல்லறையில் இயேசு, தன் நண்பன் லாசருவின்
முடிவை கண்டு கண்ணீர்விடவில்லை…தம் சாயலின்படி ரூபத்தின்படி உருவான மனுகுலத்தின் முடிவை
கண்டு கண்ணீர்விட்டார்…
கல்லறையில்
இயேசு, ஆதிமனிதனின் கீழ்ப்படியாமையினால் உண்டான கொடிய தண்டனையின் முகத்தை கண்டு கண்ணீர்விட்டார்….
கல்லறையில் இயேசு, மனிதவாழ்க்கையின் மேன்மை பாவத்தின் வல்லமையினால்
மதியற்றதும், பரிதவிக்கதக்கதும், பொருளற்றதுமாக மாறி….இப்போது அதன் கூலியை அவர்கள்
பெறுகிறார்களே என நினைத்து அவர் கண்ணீர்விட்டார்…
தேவனால் அழகாக, அற்புதமாக, அறிவுக்கூர்மையோடும்
வடிவமைக்கப்பட மனிதன்…தன் ஆதி மேன்மையை தன் கையினாலேயே அலங்ககோலமாக்கிவிட்டானே ….
ஒரு
அப்பா தன் மகனுக்கு ஒரு அழகான, விலைமிகுந்த ஒரு வெள்ளை சட்டையை வெளிநாட்டிலிருந்து
வாங்குகிறார். வீட்டுக்கு வந்ததும் தன் மகனுக்கு
அந்த சட்டையை மாட்டிவிட்டு அழகுபார்க்கவேண்டும் என்று அப்பாவுக்கு ஆசை. அப்பா வாங்கிவந்த சட்டை பிள்ளைக்கும் பிடித்துப்போகிறது. சீக்கிரமாக அதை மாட்டிக்கொள்ள விரும்புகிறான். சட்டையை வாங்கி ஓடிப்போய் அதை கண்ணாடி முன் நின்று
போட்டு தன் அப்பாவிடம் காட்ட ஓடோடி வருகிறான்…அவசரமாக வந்த அவனை அவன் சாப்பிட்டு தரையில் போட்ட வாழைப்பழத்தோல் அவனை வழுக்கிவிழசெய்கிறது…விழுந்தவனுக்கு
காயமில்லை…ஆனால் அந்த புத்தம்புது வெள்ளைசட்டை முழுக்கவும் அழுக்கு….பிள்ளையை அதிகமாய்
நேசிக்கும் அப்பாவுக்கு அந்த சட்டையின் மதிப்பினை அசட்டை செய்ய முடியவில்லை…...சட்டைக்கு
உண்டான சேதத்தை அவரால் சாதாரணமாகவும் எடுக்கமுடியவில்லை….அலட்சியத்தின் காரணம் அழகான
பரிசினை அலங்ககோலமாக்கின அன்பு மகனை அதிகமாய் தண்டிக்கவும் முடியவில்லை… அப்பாவின்
கண்கள் குளமாகின்றன…
இப்போது
இயேசு கல்லறையை திறக்கவேண்டும் என்கிறார்
(தொடரும்..)
😥👍
ReplyDelete