Thursday, April 16, 2020

இப்படியெல்லாம் நடக்கும்னு நினைக்கலே…

இப்படியெல்லாம்     நடக்கும்னு   நினைக்கல (போதிக்கப்பட்டேன்…..ஓர் தொடர் பதிவு) (2/19)

நேற்றைய பதிவை முடிக்கும்போது நான் முன்வைத்த கேள்வி இந்த  தொடர் ஊரடங்கு (தொடரும்) நமக்கு வேதனையானதா அல்லது வரப்பிரசாதமா என்று கேட்டேன்.

சிலர் இப்பதிவை லைக் செய்தனர், பாரட்டினர்ஆனால் என் கேள்விக்கான பிரதிபலிப்பு அநேகரிடமிருந்து வரவில்லை? அல்லது வரவிருப்பமில்லையா? என்று தெரியவில்லை.  என்னது பதில் சொல்லனுமா ?  என்று இப்போது ஒரு சிலர் நினைப்பதையும் என்னால் உணரமுடிகிறது.சிலர் என்னத்த சொல்றது..கட்டிப்போட்ட மாதிரி இருக்குஒன்னும் ஓடமாட்டேங்குது..நான் என்னென்னவோ பிளான் பண்ணியிருந்தேன்இப்போ எல்லாம் ஸ்பாயில் ஆயிடுச்சே என்று யோசிப்பவர்கள்…….கோடை விடுமுறை கொரோனா விடுமுறையாக மாறிவிட்டதால். ..திட்டமிட்ட வேலைகள்வெளியூர் பயணங்கள்…  ஊழியத் திட்டங்கள் திரவமாக மாறிவிடுமோ என்று ஏமாற்றம்..பொருளாதார இழப்பு ஒருபக்கம் இருந்தாலும், உழைப்பின் ஆதாரமெல்லாம் வீணானதோ என்ற கலக்கங்கள் சிலருக்கு இல்லாமல் இல்லை..விசுவாசிகளுக்கு சபைக்கு போகமுடியவில்லையே  என்ற வருத்தம், வேதனை, விரக்தி, சோகம் ஒரு பக்கம்.இன்னொரு பக்கம், முன் நாட்களில் சாங்கபோங்கமாக இருந்தவர்களுக்கு இது ஒரு தண்டனையோ, தேவக்கோபமோ, கடைசிநாட்களுக்கான அடையாளமோ என்று  சிந்தனை ஓட்டமும் தீவிரித்துகொண்டிருக்கிறதுகாரியங்களுக்கான காரணங்களை ஆராயந்து அறியவேண்டும்  என்று விவிலிய ஆதாரங்களை தேடிக்கொண்டிருக்கும் தேவ ஆர்வலரின் அலுவல்களும் ஒருபக்கம் குறைந்தபாடில்லை..பரிசுத்தவான்களின் கூடுகை தடைப்பட்டால் என்ன,  பரமன் சமூகத்தை யாரால் தடைசெய்யமுடியும் என்று வலைஒளியின் வழியாகவும், வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலமாகவும் நிஜத்தில் பார்த்தோரை நிகர்நிலையிலாவது பார்க்கமுடிகிறதே பூரித்துகொண்டிருக்கும் மக்களும் ஒருபக்கம்இது இன்றைய இயல்புநிலை!

ஒரு பெரிய கேள்வி என் மனதில் எழுகிறது.  ஊரடங்கு முடியுமா முடியாதா என்பதல்ல அது.அந்த கேள்விக்கான பதில் தற்போதைக்கு யாராலும் சொல்லமுடியாது

ஊரடங்கிற்கு பின் ஊர் முன்பிருந்தது போல் தான் இருக்குமோ? உலகத்தில்இல்லை இல்லை என்னுடைய ஊரில்.இந்த பெருந்தொற்று அடியோடு ஒழிந்துவிட்டது என்று அறுதியிட்டு சொல்லமுடியுமா..இயல்பு நிலைய நாட்டில் .பி எப்படியாக இருக்கும். (.பி. என்றால் ஒன்னுமில்லேங்க.ஊரடங்கிற்கு பின், அவ்வளவுதான்).பாருங்களேன்,  இங்கும் கொரோனாவிற்கு பின் என்று எழுத கைவரவில்லை..வறுமையை அடியோடு ஒழிப்போம் என்ற எண்ணற்ற தேர்தல் வாக்குறுதிகளை போல் இதுவும் விடியாத விடியலாக இருக்கப்போகிறதோ?  இனி ஒரு விடியல் தான் உண்டாகுமோ?  என்ன ஒரு நெகடிவ்வாக  பேசுகிறேன் என்று நினைக்கிறீங்களா

இன்று நம்முடைய முதல்வர், பத்திரிக்கையாளர் சந்திப்பில் இன்னும் 15-நாளில் பாஸிடிவ் எல்லாம் நெகடிவாக  மாறும் என்று நம்பிக்கை ததும்பும் வார்த்தைகளை பேசியுள்ளார்.இது தான் தற்போதைய தலைப்பு செய்தி என்று தெரியுமா உங்களுக்கு?  தத்துவ ரீதியில் இது தவறாக தோன்றினும்மருத்துவ ரீதியில் இது சரியானதொன்று .ஆம் தொற்று இல்லை என்று ஆகவேண்டும்!

சரி, இப்போதும் ஒரு கேள்விக்கு வருகிறேன்.இப்படிப்பட்ட ஒரு எதிர்மறையான, எதிரிடையான, ஏமாற்றத்தை கொடுக்கக்கூடிய ஒரு விஷயம் இந்த ஆண்டில் நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லங்க என்று உங்களில் அநேகர் சொல்லியிருப்பீர்கள்அல்லது நினைத்திருப்பீர்கள்சொல்லப்போனால் யாருமே இப்படிபட்ட காரியம் நடக்கும் என்று எதிர்ப்பார்த்திருக்கமாட்டோம்.எதிர்பார்க்க விரும்பவும் மாட்டோம்இல்லையா?

ஒரு மாமனிதரின், ஒரு உன்னத ஊழியக்காரரின், ஒரு பெரிய பரிசுத்தவானின்  சாட்சிஅவர் வாழ்க்கையில் அவர் கைகொண்டது, தன் ஊழியர்களுக்கு கற்றுக்கொடுத்த ஒரு போதனை என்னுடைய நினைவுக்கு வருகிறது…… எப்பேர்ப்பட்ட சூழ்நிலை வந்தாலும் நாம் ஒன்று சொல்ல அறிந்திருக்கவேண்டுமாம்.உலகத்தை உலுக்கும் தொற்றுநோய் என்றல்ல.தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு எதிர்பாராத வீழ்ச்சி நேரிட்டாலும்..இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கவேயில்லை என்று சொல்லக்கூடாதாம்I Know……ஆம், எனக்கு தெரியும் என்று தான் சொல்லவேண்டுமாம்.Nothing should catch a child of God by surprise.விசுவாச பிள்ளைகளின் வாயில் "இப்படி நடக்கும்னு நான் நினைக்கவேயில்லை" என்ற வார்த்தைகள் உதிரக்கூடாதாம்..

இன்று வரையில் இந்த உன்னதமான மனிதரின் வார்த்தைகளை என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை.அப்படி சொல்ல முயன்றதுமில்லை..நீங்க என்ன நினைக்கிறீங்க?



3 comments:

  1. கருத்துகள் விமர்சனங்கள் பகிரவும....

    ReplyDelete
  2. ஆமென். இனி "நாம் இப்படி நடக்கும் என்று நினைக்கவில்லை" என்று சொல்வதை தவிர்த்து.... "இனி சம்பவிக்க போவது என்ன?" என்பதை ஆராய்ந்து அதற்கு ஆயத்தமாவோம்! இப்படி ஒரு நல்ல பதிவை பதிவிட்டதற்காக நன்றியை சொல்லுகிறேன். கர்த்தருடைய நிழல் உங்களோடும் தங்கள் ஊழியத்தோடும் குடும்பத்தோடும் ஆசைவாடுவதாக. கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்... கிறிஸ்துவுக்குள் அன்பான சகோ. கலைவாணன்

    ReplyDelete

I WILL COME | PROMISE | GOD'S SHADOW MINISTRIES | MARCH 2025

  I WILL COME AND HEAL HIM PROMISE | MARCH 2025 Mat hew 8:7   And Jesus saith unto him, I will come and heal him   Dearly beloved...