Sunday, May 31, 2020

உம்முடைய செட்டைகளின் நிழலில் | வாக்குத்தத்த வார்த்தை | ஜூன் 2020

உமது செட்டைகளின் நிழலிலே…

 

எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்; உம்மை என் ஆத்துமா அண்டிக்கொள்ளுகிறது; விக்கினங்கள் கடந்துபோகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன் (சங்கீ 57:1)

பரிசுத்த வேதத்தில் உள்ள பல்வேறு புத்தகங்கள், வேதபகுதிகளில நமக்கு மிகவும் பிடித்த, நாம்  அதிகமாய் வாசிக்க விரும்புகின்ற, நம் வாழ்க்கை சூழல்களை வெகுவாய் பிரதிபலிக்ககூடிய, நம் பிர்ச்சனைகளுக்கான விடையளிக்கக்கூடிய ஒரு புத்தகம் இருக்குமானால் அது சங்கீதங்களின் புஸ்தகமாகத்தான்  இருக்கும். 

சங்கீதங்கள் புஸ்தகம் ஒரு பாடல்கள், கவிதைகள், கீதங்களின் தொகுப்பாகவே காணப்படுகிறது.   தேவனோடுள்ள உறவில் நாம் பெலப்பட, வளர, சோதனைகளை மேற்கொள்ள, நம்பிக்கையில் நிலைத்துநிறக, எல்லாவற்றிற்ற்கும் மேலாக தேவனுக்கு நன்றிகளையும் துதிகளையும் படைக்க  பாடல்கள் மிகவும் துணைபுரிகின்றன.

சந்தோஷம், குதூகலம், உற்சாகம், துக்கம், வருத்தம், வேதனை, நஷ்டம், பயம் போன்ற பற்பல மனித உணர்வுகளின் பிரதிபலிப்புகளை சங்கீதங்கள் நமக்கு அழகாக படம்பிடித்துகாட்டுவதோடு,  உணர்ச்சிப் போராட்டங்களின் நடுவில்  தேவன் நமக்கு எத்தகைய ஆறுதல், தேறுதல், விடுதலை, உயர்வு, மேன்மை போன்ற செம்மையான ஆசீர்வாதங்களை வைத்துள்ளர் என்பதையும் அது நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

இவைகள் மனிதனின் கவிகளேயானாலும்,  இவைகள் ஒவ்வொன்றிலும் தேவன் தம் ஆவியை புதைத்து வைத்துள்ளார் என்பதை நாம் மறுக்கமுடியாது.  ஒவ்வொரு பாடலும் தேவனுடைய மகத்துவத்தை நமக்கு எடுத்துசொல்லும் ஒரு பொக்கிஷம் என்றால் அது மிகையாகாது. 

தேவ ஆவியானவரின் வழிநடத்துதலின்படி, ஜூன் மாதத்தின் தியானத்திற்கு நாம் சங்கீதம் 57-ஐ தியானிக்கவுள்ளோம்.  இந்த வேதபகுதியில் கர்த்தர் நமக்கு வைத்துள்ள அவருடைய ஆசீர்வாதமான தீர்க்கத்தரிசன வார்த்தைகளை நாம் ஜெபத்துடன் கவனிப்போம். தேவன் தாமே உங்களோடு இடைபடுவாராக.

ஓடி ஒளிந்தவனின் ஓலம்

சங்கீதம் 57  தன்னை கொல்ல வகைதேடும் மாமனின் கையிலிருந்து தப்பிப் பிழைத்து குகைக்குள் ஒளிந்துகொண்ட ஒரு தேவமனிதனின் கவி.  கவிஞனுக்கு எதிராக வந்தது ஒரு கரடியோ, சிங்கமோ அல்லது ஒரு இராட்சதனோவன்று. அவைகளை அவன் ஏற்கனவே துவம்சம் செய்தவன். ஆனால், இப்போது இவன் மனிதனுக்கு பயந்து ஓடுகிறான்.  சொந்தங்களுக்கு தப்பி ஒளிகிறான்.  பலசமயங்களில், நம் வாழ்க்கையிலும் நம் வீட்டாரே சத்துருவாக மாறுவது உண்மைதானே.. ணவனுக்கு எதிராக மனைவி, மனைவிக்கு எதிராக கணவன், தகப்பனுக்கு விரோதமாக பிள்ளை, பிள்ளைக்கு விரோதமாக தகப்பன், மாமிக்கு விரோதமாக மருமகள், மருமகளுக்கு விரோதமாக மாமி,  அண்ணனுக்கு விரோதமாக தம்பி, தம்பிக்கு விரோதமாக அண்ணன் என்று உறவுகளுக்கு இடையே காணப்படும் பகை கொடுமையானது.  அன்புகூரவேண்டிய உறவுகள் ஒருவரையொருவர் அடித்துக்கொள்ளலாமா? தம்பியை பகைக்கும் அண்ணன் அவனை கொன்றேபோடுகிறான். மரணமும் சாபமும் குடும்பத்தை வந்தடைகிறது. அந்த சந்ததியின் வழியே வந்த நாமும் கூட சில சமயம் இப்படிப்பட்ட பகைமையின் பாதிப்பை சந்திக்கிறோம்.  ஆபேல் நீதிமான் தான்.  ஆனாலும், அவன் தன் சொந்த சகோதரனால் பகைக்கப்பட்டான்.                                                                                                                       சொல்லால் கொள்ளும் பந்தங்கள் (வச 3, 4, 6)

அவர்கள் பற்கள் ஈட்டிகளும் அம்புகளும், அவர்கள் நாவு கருக்கான பட்டயமுமாயிருக்கிறது    (வச 4)    

வாளால் ஒருவரை கொன்றால் அவன் அன்றே மரிப்பான். ஆனால், வாயால் (சொல்லால்) ஒருவரை கொன்றால் அவன் அனுதினமும் மரிப்பான். இது நம்மில் அநேகர் கடந்துபோகும் பாதை. தேவப்பிள்ளைகளாகிய நாம், கிறிஸ்துவுக்காக, ஊழியப் பாதையில் பாடனுபவிக்க ஒருவேளை சளைக்கமாட்டோம்.  ஆனால் கிறிஸ்துவுக்குள் இருக்கிறேன் என்று சொல்லி தனிமனித நிந்தனை, அவமானம், எதிர்பேச்சு, தூஷனம், அவதூறு, பொய் குற்றச்சாட்டு போன்ற ஆயுதங்கள் நம்மேல் எய்யப்படும்போது நாம் அதனை சந்தோஷம் என்று எண்ணாமல் (மத் 5:11) உடனடியாக நம் கோபத்தை, வைராக்கியத்தை, அழுகையை, வேதனையை, விம்மலை  வெளிப்படுத்துகிறோம்.  சிங்கத்தின் வாயை கிழித்த தாவீது இங்கு மனிதனின் பற்கள் ~ மனிதனின் பேச்சை கேட்டு ~ வாயினால் தீயை வாரியிறைக்கும் உறவுகளை கண்டு ~ சோர்ந்துபோகிறான்.  தீயினால் சுட்ட புண் உள்ளாரும். ஆறாது நாவினால் சுட்ட வடு என்ற குறளைப் போல் இங்கு, இவர்களுடைய நாவு கருக்கான பட்டயத்தை போல் இவனை கிழிக்கிறது. தாவீது சந்தித்த விக்கினம் ஒரு பேரிடரோ, வாதையோ  அல்லது ஒரு கொள்ளைநோயோ வன்று,  அது மனிதரால், சொந்தங்களால் வந்த சூழ்ச்சியாகவே உள்ளது. (வச 2, 3, 6). ஒருவேளை நீங்களும் இப்படிப்பட்ட உறவுகளின் வார்த்தை, செயல், சிந்தனை, நாசமோசம், பகை போன்ற காரியங்களின் நிமித்தம் நொந்துபோயிருக்கலாம். சிலசமயம், எங்கேயாவது ஓடிபோயிடலாமா என்றும் நினைத்திருக்கலாம்!  சங்கீதம் 57-ன் தலையங்கம் தாவீது கெபியை நோக்கி ஓடினான் என்று சொல்லுகிறது. நீங்கள் எந்த கெபி அல்லது குகையை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்?

கெபியிலிருந்து செட்டைகளுக்குள்

விக்கினங்கள் கடந்துபோகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன் (57:1)

தாவீது தஞ்சம் புகுந்தது ஒரு குகைதான் என்றாலும், அவன் குகை மனிதனாக இருக்கவில்லை.  இருள் அவனை சூழ்ந்திருந்தாலும், தேவன் அவனுக்கு வெளிச்சமாகயிருந்தார். (சங்கீ 18:28). குகைக்குள் சென்றவன் ஆண்டவனை அண்டிக்கொள்கிறான்.  குகையல்ல தன் உண்மையான அடைக்கலம் தேவனே என்று உணருகிறான். இங்குமட்டுமல்ல, தன் வாழ்க்கையின் எப்பொழுதெல்லாம நெருக்கடி வந்துள்ளதோ அப்பொழுதெல்லாம் அவருடைய செட்டையின் நிழலை நாடினவன் சங்கீதக்காரன் தாவீது. ஒரு கழுகு அல்லது ஒரு பறவை எப்படி தன் குஞ்சுகளை தன் சிறகுகளில் நிழலிலே, செட்டையின் மறைவிலே பத்திரமாக பாதுக்காக்குமோ அப்படியே தன்னையும் தான் நேசிக்கும் தேவன் தன்  செட்டையின் மறைவியில் பாதுகாப்பார் என்று நிச்சயிக்கிறான். தாவீதின்  தன் அனுபவத்தில் தேவனுடைய செட்டையின் நிழலில் கண்டது….

1.தேவ பாதுகாப்பு (சங்கீ 17:8)

2.தேவ கிருபை (சங்கீ 36:7)

3.தேவ அடைக்கலம் (சங்கீ 57:1)

4,தேவனால் உண்டாகும் மகிழ்ச்சி(சங்கீ 63:7)

இந்த பட்டியல் முழுமையானதன்று. அவருடைய் செட்டையின் தஞ்சம் புகுந்தால் இன்னும் பல மேன்மையான அனுபவங்களை நீங்கள் பெறுவீர்கள் என்பதில் ஐயமில்லை. ஆம். தாவிதைப் போல் இந்த நொடியே கெபியிலிருந்து வெளியேறி அவருடைய செட்டைகளுககுள் புகுந்துவிடுங்கள்.

தொய்ந்தவன் தீர்மானிக்கிறான்

என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது; தேவனே, என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது..(சங்கீ 57:7)

சொல்லடிபட்டு நொந்தவன், கெபியில் ஓளிந்துகொள்ள விரைகிறான்.    கெபியில் இருந்தவன், என் அடைக்கலம் இந்த இருண்ட குகையன்று, மகாதேவனின் செட்டைகள் என்பதை உடனே உணருகிறான். பறவையின் செட்டைகளின் கீழ் அடைக்கலம் புகுந்த குஞ்சுகள் ஒருவேளை அதன் மறைவில் சுகமாக தங்கியிருக்கும். அதுவே போதும் என்றும் இருக்கும். ஆனால் தாவீதுக்கோ, தேவப்பிள்ளைக்கோ, கிறிஸ்துவின் சீடனுக்கோ செட்டை படுத்து தூங்கும் இடமல்ல, உணர்வடைந்து உயிர்ப்பிக்கப்படும் ஒரு பட்டறையாக மாறவேண்டும்.  குகையில் குமுறல் இருக்கும், ஆனால் செட்டையின் நிழலில் களிகூறுதல் உண்டாகும் (63:7).  சிறையில் அடைக்கப்பட்ட பவுலும் சீலாவும் சோகப் பாட்டை பாடாமல், சந்தோஷகீதங்கள் பாடி சிலரின் இரட்சிப்புக்கு வாய்க்காலானார்கள்.  சிறையிலும் இரட்சிப்பு மலரக்கூடுமானால், செட்டையின் நிழலில் எப்பேர்ப்பட்ட மறுமலர்ச்சி உண்டாகக்கூடும். தாவீதுக்குள் ஏற்பட்ட மாற்றங்கள் தான் என்ன?

1.விழுத்தெழுந்த தாவீது (57:8)

2.கூப்பிட்ட தாவீது (57:2)

3.துதித்த தாவீது (57:9)

4.பாடின தாவீது (57:9)

5.அறிவித்த தாவீது (57:9)

குறிப்பையும் வசனத்தையும் விளக்க இடம் போதாது. வாசித்து தியானியுங்கள் தேவன் உங்களுக்கு உதவிசெய்வார். ஒரே வரியில் சொன்னால் செட்டையின் மறைவில் வந்ததை, தாவீது தனக்கு பாதுகாப்பாக கருதி அமர்ந்திராமல் அவன் தன் செயல்களின் மூலம் தேவனை மகிமைப்படுத்தினான்(வச11). இன்றும் இரட்சிக்கப்பட்டு இயேசு கிறிஸ்து என்னும் மறைவுக்குள், நிழலுக்குள், செட்டைகளுக்குள் வந்துள்ள நாம் நம்முடைய பாதுகாப்பில் குளிர்காய்கிறோமா அல்லது அவரை அறிவித்து, தெரிவித்து அவரை மகிமைப்படுத்துகிறோமாதாவீது நமக்கு ஒரு முன்னோடி அல்லவா? விசுவாச - விசுவாசித்தவனின் - வார்த்தைகள் எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன் (57:2)

தேவனுடைய செட்டையின் மறைவில் தஞ்சம் புகுந்து தேவனை மகிமைப்படுத்த ஆரம்பித்தவனின் வாழ்க்கையில் இப்போது ஒரு வியக்கத்தகு மாற்றம் உண்டாகிறது. பயம் பரவசமாகிறது, அழுகை ஆனந்தக்களிப்பாகிறது. ஜீவன்தப்ப ஓடினவன் ஜீவதேவனுக்குள் நம்பிக்கை அடைகிறான்.  அவனுக்கு ஒரு நம்பிக்கை உண்டு, இந்த விக்கினம் கடந்துபோகும் என்று. அல்லேலூயா! முதல் வசனத்தின் முதல் பகுதி ஜெபமாக இருந்தாலும், அதன் இறுதி பகுதி ஒரு விசவாச அறிக்கை, நம்பிக்கைநிறை செய்தியாகவே உள்ளது. விக்கினத்தை நீக்கும் என்று கேட்கவில்லை. விக்கினம் கடந்துபோகுமட்டும் என்று சொல்லுகிறார். செட்டையின் கீழ் வந்தவன் விசுவாசத்தில் வல்லவனாகிறான். அதுதான் செட்டையின்கீழ் காணப்படும் அற்புதம்.

 இந்த சங்கீதத்தில் தேவன் தான் செய்வேன் என்று சொல்லும் ஒரு வாக்குத்தத்தையும் நாம் பார்க்கமுடியாது. மாறாக, தேவன் தனக்கு என்ன செய்வார் என்ற உறுதியான விசுவாச அறிக்கைகளை தாவீது ஏறெடுக்கிறார். தேவன் இந்த சங்கீதத்தை நமக்கு தந்தது, தாவீதை மெச்சுவதற்கு மட்டுமல்ல, நாமும் தாவீதை போல் மாறுவதற்கே. தாவீதின் அறிக்கைகள் நம்முடைய அறிக்கைகள் ஆகவேண்டும். அதுவே நமக்கு தேவனுடைய வாக்குத்தத்தம் என்று நான் நம்புகிறேன். தாவீதின் பார்வையில், அனுபவத்தில்….

 தேவன்…

1.இரட்சிப்பை அனுப்புவார்(57:3)

2.கிருபையை அனுப்புவார்(57:3)

3.சத்தியத்தை அனுப்புவார்(57:3)

4.யாவற்றையும் செய்துமுடிப்பார் (57:2)                                                       என்ன ஒரு ஆச்சரியமான காரியம்? இந்த நான்கு குறிப்புகளையும் இணைத்து பாருங்கள். இரட்சிப்பு, கிருபை, சத்தியம் என்று மூன்று நாம் ஆண்டவராகியே இயேசுவை குறிக்கிறது.  நமக்காக யாவையும் சிலுவையில் செய்துமுடித்த அருள்நாதரும் அவரே. இயேசுவின் சமூகத்தை அல்லவோ இது குறிக்கிறது. 

செட்டையின் நிழலில் வந்தடைந்த ரூத்தை பார்த்து அன்று போவாஸ் சொன்னார்., 'உனக்கு நிறைவான நன்மை உண்டாவதாக. இன்றும் இந்த வாக்குத்தத்த செயதியை வாசித்த அதனை ஏற்றுக்கொள்ளும் உங்களுக்கு பரம போவஸின் கரத்தினால் நிறைவான நன்மை உண்டாகவேண்டும் என வேண்டிமுடிக்கிறேன்.

அவருடைய் செட்டையின் நீழலில் தங்கியிருங்கள்,

 கிறிஸ்துவின் பணியில்,உங்கள் சகோதரன்

வினோத்குமார்

  தேவநிழல் ஊழியங்கள்,                                                                  9840011374, 9840995057                                                      https://devanizhal.blogspot.com

உங்கல் மேலான கருத்துகளையும், விமர்சனங்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்


IN THE SHADOW OF THY WINGS | JUNE 2020 PROMISE WORD

 
                                                                                                                                                             

                                                                                                       

 Among all the books of the Holy Bible, if  I ask you to pick up your most endearing and most appealing book, many, invariably, will choose the Book of Psalms.  We often run into Psalms for solace in times of trouble, comfort in periods of loss and hope in seasons of despair. Therein we see, not only a reflection of our own life, but even answers that shape our living.   Psalms is a compendium of songs, poems, sonnets compiled by the sweet Psalm writer of Israel, King David and few other hymnists.  Truly these songs, strengthen our spirit, sustain our hope, stumbles our adversaries and most importantly teach us to offer the right kind of sacrifices to God ~ songs of praises and thanksgiving

The Psalms not only capture the  essence of  our emotions in every day life viz., joy, delight, passion, sorrow, pain, worry, loss, fear etc.,etc.,   it also points to us the great comfort, consolation, deliverance, promotion, victory and such other blessings which comes from God in the midst of all confusions and chaos.It is a fact that these  were written by men of God in different seasons of their life. Yet, the spirit of God treasured in these psalms is also a fact, which no man can hide. Every other psalm is a pearl which preaches to us the principles of Godly life.  For June 2020, as led by the Lord, we will meditate Psalm 57. Let us, together, explore and unearth the riches of God's blessing in this timeless song.

 Fugitive's Frailty

The title words of Psalm 57, reads like the headline of a modernday newspaper: 'Israel's sweet singer on the run, chased by his own father-in-law'. Green-eyed King Saul wants to eliminate David,  God chosen successor.  Now crown prince is gone into a cave. But this racer is truly not a coward.   He has, in the past, wrecked lions, bears and even giants in his life.   But  now he is demoralised by his own father in law. Many a time, our loved ones, our family members turn out to be our enemies and evil-wishers. Husband against wife, wife against husband, father against son, son against father, brother against brother, daughter-in-law against mother in law and vice versa.  Relatives are there to love and care for each other.  How could there be an enemity, hatred, animosity between the members of the same family, born of the same womb?  Elder sibling hates the younger.  A cold-blooded murder follows a  generational curse on this family.  Descending from that family line, even we also suffer the effects of the curse in our lives. Abel was righteous. But his blood was shed by his own blood relative.

 Tongue is sharper than knife! (verses 3, 4, 6)

 Psa 57:4  My soul is among lions: and I lie even among them that are set on fire, even the sons of men, whose teeth are spears and arrows, and their tongue a sharp sword. 

 Piercing a dagger into somebody may lead to instant death.  But pricking somebody with words would cause daily death in him.   A path which many of us tread.  As children of God, we may not hesitate to suffer for the Lord in our ministerial endeavours. However, as witness of Christ, we often fumble and falter when faced with fiery verbal and emotional attacks.  Disgrace, dishonour, false accusation, slander, humiliation and the like grind our spirits and buries our temperance. We are unable to count it as joy (Mat 5:11) and end up displaying our lament, anger, frown, frustration, despondency and defeatedness. The one who tore the jaw of  lion is now  troubled by the teeth of men ~ harsh words of men ~ whose tongues are set on fire.  Like a sharp-edged knife, their tongue, their reproach is cutting the heart of David into two.  David's calamity is neither covid 19 pandemic nor swarming deadly locusts. He is hurt by the deadly verbal abuse of his own (vs., 2,3,6).  Maybe you are also walking in the same path and much troubled by the words of your near and dear ones. Distressed by their acts of  hatred and bitterness you may have wanted to run away, escape from their world, and your own world too!  In Psalm 57 David is seen running toward a cave.  Are you running towards some cave or are you in there already?

 Cave to Wings

.. in the shadow of thy wings will I make my refuge, until these calamities be overpast (Psalms 57:1)

 Even though David found a cave to hide himself, he never remained a cave-man for long. Even though darkness was shrouding him, he confessed that God will be his light, even in darkness (Psalms 18:28).  Inside the cave, he cleaved to his God.  He realizes that not any cave, but everlasting God is his only hope.  Not only here, whenever he was faced with a crisis, his soul thirsted for God, his whole being sought the shadow of almighty.  As an eagle that guards the eaglets under her  sprawling feathers, under her mighty wings, he affirms that the God whom he loves would protect him under the shadow of His wings.  What did David find  in his 'shadow of wings' experience?

1.God's Protection (Psalms 7:8)

2.God's Loving Kindness (Psalms 36:7)

3.God's Refuge (Psalms 57:1)

4.God's Joy (Psalms 63:7)

This list is not complete. You can experience even greater things under the shadow of His wings. Yes. Take a decision now to immediately leave the dark dungeon of depression and get under the the shadow of God almighty.

Defeated Decides

My heart is fixed, O God, my heart is fixed: I will sing and give praise (Psalms 57:7)


Struck by words, he runs into a cave. Surrounded by darkness, he realizes that not this cave, but only the wings of the Lord God can protect him.   The young ones of a bird would find the warmth of the wings as a cozy place to rest.  It may seek not more than that. But to David, for the child of God, for the disciple of Christ, the wings are not a place to rest and lie down.  It  should become a workshop for realization and revival.   Cave echoes man's depression and despondency, but Wings(of God) expresses God's joy and deliverance (Psalms 63:7).  Beaten and bruised Paul and Silas, chose singing in place of wailing.   They became a channel of blessing to many.   If Salvation could bloom inside the prison doors, how much more it should under God's wings?  What was the story behind the wings?  An amazing transformation took place, not inside the cave, but under the wings, happened in the life of David.

 David….

v Arose (57:8)

v Called (57:2)

v Praised (57:9)

v Sang(57:9)

v Proclaimed(57:9)

Herein is no space to explain each of these five part transformation in the life of David.  Encourage you ro read and meditate. God will surely help you.

If we have put in one sentence, David did not chose to relax and lie down in the comfort of God's abiding presence,  he glorifies God with this acts (vs 11)

Even today, having coming under the shelter and wings of Lord Jesus Christ, do we feel satisfied in just enjoying His shadow, or do we glorify God by announcing him to others? Is not David an example to us? These are the words of a believer - one who believed : I will cry unto God most high; unto God that performeth all things for me. (57:2).

An amazing change occurs in the life of the one who chose to glorify God by coming under His shadow. Fear gives way to confidence, mourning gives way to joy, one who ran to save his own life has now found new life in the life-giver. 

He knows that this calamity will pass.  Hallelujah!   The first part of the first verse might be prayer for mercy. But the later part is a 'faith confession', 'message of hope'. He does not ask for the calamity to the removed. His plea is to 'hide' until the calamities are overpast.  One who fell under the shadow of God's wings, becomes a warrior of faith.  That is the miracle found under the shadow of His wings!

Interestingly, in this Psalm, we don’t even find a single promise from God as to what he would do!    But we find the psalmist professing a number of positive statements about God and his doings. The Spirit of God has kept  this Psalm to not just applaud the faith of David, but to make him as an example to us!  The Davidical confesions must become ours! I believe that to be the promise of God.  In the sight of David, in his experience, under the shadow of His mighty wings….

God
1.Sends Salvation(57:2)                                                                                                                          2.Sends Grace(57:2)                                                                                                                              3.Sends Truth(57:2)                                                                                                                          4.Performs (Fulfils) all things (57:2)

Do you notice an interesting parallel?  Just put these four points together. Salvation, Grace, Truth and the God who finishes everything for us.  All these point toward our Blessed Lord and Saviour Jesus Christ. He is the one who finished everything for us on the cross.  Under His mighty wings, we enjoy the sweet presence of our Lord. To the moabite woman Ruth who chose the God of her mother-in-law Nahomi, kinsman Boaz said,

 The LORD recompense thy work, and a full reward be given thee of the LORD God of Israel, under whose wings thou art come to trust (Ruth 2:12) 

 Today I pray, I decree and declare the same word of promise upon each and everyone reading this and finding shelter under the shadow of His Mighty wings. May you receive the fullest reward and recognition  from the hands of the heavenly Boaz.

 Continue to abide under the shadow of His wings

 In His Service, Your brother in Christ,

Vinod Kumar

God's Shadow Ministries

9840011374, 9840995057                                                                                                            https//devanizhal.blogspot.com

Please post your valuable comments, feedback, suggestions and testimonies.

 


Monday, May 25, 2020

Heartbroken yet Hearkened…(God's Megaphone 10/10)



Heartbroken yet Hearkened…
Elijah, a dejected, defeated man responded to God's still small voice.  It looks as if he knew that even when God said he would pass by, he cannot be found in earthquake, fire or even wind. Quite interestingly and much intriguingly, the Bible says, that after all this 'dramatic' events, God spoke to him in a whispering voice.

To me it is really mind boggling.   The dust of the wind,  the aftershock of earthquake,  the smoke of  the fire would still be raging.  And in the midst of all these, the voice of God's came not as a thunderbolt, but as a still small voice comes calling.

Elijah's cave experience shows that as humans we all will have our down times and we may have even have questions to ask to God like Elijah did.   These questions are not unfamiliar to us.  Even we want to ask God many questions.  Whether we ask or not, we have many many questions in our heart as to why this happened, why that happened, why it cannot be so, why should I alone face this? etc., etc.,   Elijah was no different when  it comes to cave.

But remember, the same Elijah was taken up in a chariot of fire.  He did not meet death. 

Three facts
1.Elijah was disappointed and sought answers from God for the calamity dangling over head. ~ Reality of man's frailty!
2.God met Elijah and spoke to him in a still small voice, in the background of wind, tremor and fire ~ God's mode of communication !
3.Elijah's ears were sensitive and sharp to catch the whisper of God amidst commotion ~ Servant of God's Spiritual Sensitivity.

At all the times, let us be spiritually sensitive to the voice of God.  Disappointment will not lead you to death.

The shepherd promises eternal life to the sheep which hearkens his voice!

Ends…for now!

குமுறலும் கேட்டலும்…(தேவனுடைய ஒலிப்பெருக்கி 10/10)


குமுறலும் கேட்டலும்…

சோர்ந்துபோன, ஏமாற்றமடைந்த, தோல்வியுற்ற மனநிலையில் இருந்த எலியா தேவனுடைய மெல்லிய குரலை கேட்டான்.   கடந்துபோவேன் என்று தேவன் சொன்னாலும், அவர் காற்றிலும், பூமியதிர்ச்சியிலும், நெருப்பிலும் இருக்கபோவதில்லை என்று எலியா முன்னே அறிந்திருப்பதாகவே படுகிறது.  மிக சுவாரஸ்யமானதும், விளங்கிகொள்வதற்கு கடினமானதுமான காரியம் என்னவென்றால், வேதம் சொல்லுகிறது, இப்பேர்ப்பட்ட 'பயங்கரமான' நிகழ்வுகளுக்கு பின் தேவனுடைய குரலை எலியாவை நோக்கி மெல்லிய சபதத்தில் தொனித்ததே!
உண்மையில் இது என் மூளையை கசக்கி பிழிய வைத்தது.  காற்றில் பறக்கும் தூசு,  நிலநடுக்கத்தின் பின்னதிர்வுகள்,  நெருப்பு கிளப்பிய புகை ~ இவைகளில் தடயங்கள் அவ்வளவு சீக்கிரம் அகல வாய்ப்பில்லையே.  ஆனாலு, இவைகளுக்கு நடுவில், தேவனுடைய குரல், இடிமுழக்கம் போல் அன்று, ஒரு மெல்லிய சப்தமாக அழைக்கிறது. 

எலியாவின் கெபி  அனுபவமானது மனிதர்களாகிய நம்முடைய வாழ்க்கையில் நமக்கு பள்ளத்தாக்குகளும், விரக்திகளும், வருத்தங்களும்  இருக்கும் என்பதையும், எல்லாவற்றிற்கும் மேலாக தேவனிடம் கேட்பதற்கு நம்மிடம் எண்ணிலடங்காத கேள்விகளும் இருக்கும் என்பதை எடுத்துக்காட்டுகிறது.   இந்த கேள்விகள் எல்லாம நமக்கு பரிச்சமானவைகள் இல்லை என்று சொல்லமுடியுமா? நமக்கும் ஆண்டவரிடம், ஆண்டவரை பார்த்து கேட்கவேண்டும் என்று அநேக கேள்விகள் உண்டு அல்லவா? நாம் கேட்டாலும் கேட்காமல் போனாலும் சரி, நமக்குள்ளே இந்த கேள்விகளின் களஞ்சியம் இல்லாமல் இல்லையே?   ஏன் இது நடந்தது? ஏன் இப்படி நடந்திருக்ககூடாது? ஏன் எனக்கு இது சம்பவிக்கவேண்டும்? போன்ற பலபல கேள்விகள்.  எலியாவின் மனம் என்கின்ற கெபிக்குள் இந்த கேள்விகள் தானே இருந்தது.

ஆனால் ஒன்றை நாம் மறக்கக்கூடாது.  எலியா அக்கினி இரதத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டான்.  அவன் மரணத்தை சந்திக்கவில்லை.

 மூன்று உண்மைகள்  

1.ஏமாற்றத்தின் உச்சத்தில் இருந்த எலியா தன் தலையின் மேல் விக்கினத்தின் பட்டயம் ஏன் தொங்கவேண்டும் என்று தேவனிடம் கேட்கவிரும்பினான் ~ மனிதனின் பெலவினம்!

2.தேவன் எலியாவை சந்தித்து, மெல்லிய குரலில் அவனோடுகூட பேசினார்.  காற்று, நிலஅதிர்வு, நெருப்பு இதன் பின்னண்யில் அ வருடைய இரகசிய குரல் வெளிப்பட்டது ~தேவனின் ஊடகம்

3.எலியாவின் செவிகள், கூச்சலும் குழப்பத்திற்கும் இடையில் தேவனுடைய மெல்லிய குரலை கேட்கும் அளவிற்கு உணர்வுள்ளதாகவும், கூர்மையுள்ளதாகவும் இருந்தது ~ ஊழியனின் உணர்வுள்ள ஆவி.

எல்லா சமயங்களிலும் நம்முடைய ஆவி தேவனுடைய மெல்லிய குரலை கேட்பதற்கு உணர்வுள்ள்தாக இருக்கவேண்டும்.  மனச்சோர்வு உங்களை மரணத்திற்கு நேராக நடத்திடாது.

தன் சத்தத்திற்கு செவிகொடுக்கும் ஆடுகளுக்கே மேய்ப்பன் நித்திய ஜீவனை தருகிறார்.

முற்றும்.


Saturday, May 23, 2020

என் ஆடுகள் என் சத்தத்திற்கு….(தேவனுடைய ஒலிப்பெருக்கி 9)


என் ஆடுகள் என் சத்தத்திற்கு….


நாம் வாழும் உலகில், அதுவும் குறிப்பாக இந்த தகவல்தொழில்நுட்ப யுகத்தில், நம்மை சுற்றிலும் காரியங்கள் பரபரப்பாக நடந்துகொண்டிருப்பது மாத்திரமல்ல,  எங்கு பார்க்கிலும் சத்தம், கூச்சல், பற்பல திசைகளிலிருந்து எழும்பு குரல்களின் ஆதிக்கம்.  அது ஒரு தொலைக்காட்சி சேனலாக இருந்தாலும் சரி அல்லது சமூக வளைதளமாக இருந்தாலும் சரி, அபிப்பிராயங்கள், மாற்று அபிப்பிராயங்கள்,  வாதங்கள், விவாதங்கள், கருத்துமோதல்கள் என்று எங்கு பார்க்கிலும் சத்தங்களின் சங்கமம் அரங்கேறிக்கொண்டேபோகிறது.  பலசமயங்களில், இந்த விவாதங்கள் நம்மை கட்டியெழுப்பாமல் காதுகளை கலவரப்படுத்தி காயப்படுத்துகின்றன.


ஒரு கற்பனை காட்சி.   ஒரு சிறு குழுவில் அல்லது கூட்டத்தில் நின்றுகொண்டிருக்கும் என் மகனை நான் கூவி அழைப்பது எளிது. என் சத்தம் அவன் கவனத்தை எளிதில் ஈர்க்கும்.   ஆனாலும் ஒரு திரளான் கூட்டத்தின் நடுவில், கூச்சலும் குழப்புமான ஒரு மக்கள் கடலில் அவன் சிக்கியிருப்பானானல்,  என்னால் அவனை அடையமுடியாது. என் குரலையும் அவனால் கேட்கமுடியாது.  எவ்வளவுதான் சத்தம் போட்டாலும்.  ஏன்?  அவன் காதுகள் சுற்றியுள்ள சத்தங்களின் திரளினால் அடைக்கப்பட்டுள்ளது.   உண்மையில் என்னை கேட்பது அவனுக்கு எளிதாக இராது.  அதிக கவனம், குவிமையம், கவனக்கூர்மை இருந்தால், ஒருவேளை, அவனால் அந்த கூட்டத்தில் என் குரலை அவனால் கேட்டிருக்கமுடியும். ஒருவேளை ஒரு புனைப்பெயர் அல்லது செல்லப்பெயரை வைத்துக் கூப்பிட்டால் அவனை அடையக்கூடிய வாய்ப்புகள் இருக்கலாம்…


இந்த வேதப்பகுதியில், நம்முடைய நோக்கம், பொதுவாகவே ஆண்டவர் என்ன சொன்னார்? எலியா என்னை சொன்னார்? என்றே இருக்கும்.   நம்முடைய கவனத்தை தாண்டிச்செல்லும் ஒரு காரியம், ஒரு முக்கியமான குறிப்பு, அதுவும் குறிப்பாக இந்த காலக்கட்டத்தில், என்ன்வென்றால், சோர்வுற்று மனநிலையிலும் தேவனுடைய் குரலை குறித்த ஒரு கூர்மையான கவனிப்பு இவனுக்குள் இருந்தது தான்.

எலியாவை சந்தித்த தேவன் முதலில் கேட்ட கேள்வியும்,  அடுத்த கேட்ட கேள்வியும் ஒன்றே! எலியா, இங்கே என்ன செய்கிறாய்?  இங்கே என்பது கெபியை காண்பிக்கிறது.  கெபியிலிருந்து வெளியேறி மலையில் நின்றிட தேவன் அழைக்கிறார்.

தேவன் கடந்துபோனார் என்று வேதம் பதிவிடுகிறது.   ஒரு பலத்த  காற்று, ஒரு பெரிய பூமியதிர்ச்சி, ஒரு நெருப்ப அங்கே கடந்துசென்றது.  எலியாவோ இன்னும் கெபியில். இவைகளில் ஒன்றாகிலும் அவனை வெளியே கொண்டுவரவில்லை.   ஒருவேளை அவன் தன்னை இந்த சீற்றங்களிலிருந்து பாதுக்காக பதுங்கியிருந்தானா?  ஆனாலும், அவன் எப்படி அசையாமல் இருந்திருப்பான்.

எலியாமெல்லிய சத்தத்தை கேட்டபோது சால்வையினால் தன் முகத்தை மூடி,  கர்த்தரை சந்திக்க வெளியே வந்தான்.  அந்த மெல்லிய சத்தம் என்ன சொல்லிற்று என்று வேதம் நமக்கு வெளிப்படுத்தவில்லை.   அந்த மெல்லிய சத்தம் எலியாவுக்கு என்ன சொல்லியிருக்கும்?  நெருப்பு, நிலஅதிர்வு மற்றும் காற்றின் களேபரம் சூழந்த ஒரு நிலையில் அந்த மெல்லிய சத்தத்தை எப்படியாக அவன் உணர்ந்தான்?  நாம் என்ன சொல்லுவோம்? எலியாவும் நம்மை போன்ற பாடுள்ளவன்  தான் என்று எண்ணி, நம்மடைய ஏமாற்றத்திலும் அவனை பற்றி சிந்தித்து நம்மை ஆறுதல்படுத்திக்கொள்கிறோம். ஆனால் எலியா நீங்கள் நினைக்கிற மாதிரி ஒரு சாதரண மனிதன் அல்ல! ஏன் தெரியுமா?
(ஒலிப்பெருக்கி தொனிக்கும்…)




My sheep hear my voice…(God's Megaphone 9)


My sheep hear my voice…
In the world in which we are living today, particularly in this information-digital age, there is not only frenzied activity everywhere, but there is just too much noise, too many voices coming from many different quarters. Whether it is a television channel or social media platform, there are opinions, counter opinions, debates and  more debates.  More often than not, these debates rather than being constructive, end up as cacaphony of opinions.


Imagine this.  If I were to call my son from a small group or crowd I can just call his name to draw his attention.   But if he is embroiled in a crowd with so much of noise in the environment,  I will not be able to reach him, even if I shout at my highest decibel.  Reason.  His ears and (even mine) is completely clogged by the noise around.  It is not that easy.   One would require highest amount of attention, focus, concentration to be able to single out one voice in that crowd.  Maybe a nickname, maybe a pet name would help, I suppose.

Though our focal point, in this passage will always be on what did God say?  And how Elijah responded.  A point which 
would miss our attention and which gains importance, especially at a time like this is the focus that this man, despite his dejected state of mind,  had on God and his voice.When God's word came for the first time the question was the same, What are you doing here,  Elijah?  Here means Cave. God asked him to come and stand on the mount.  

The Bible says that God indeed passed by.  He let a wind, an earthquake, a fire to go before.   Elijah was still in the cave.   None of these things caused his exit from the cave.  Was he protecting himself in the cave or was it something else?   How could he remain unmoved.  

Elijah heard the still small voice and came out covering his face, to meet the Lord.  The Bible is silent on what the still small voice would have communicated to him.  Can you think of what that still small voice would have told Elijah?  How could someone who had just come under the conglomerate of noises decipher the voice of God?   At times, we associate ourselves with Elijah when we are downcast.  But Elijah was still a different man.  Do you know why?  
(Megaphone roar…)

Friday, May 22, 2020

ஆரவரிக்கும் மூன்று (தேவனுடைய ஒலிப்பெருக்கி 8)




 ஆரவரிக்கும் மூன்று…
தேவனுடைய ஒலிப்பெருக்கி தொடரில் நாம் இரண்டு காரியங்களை கவனித்தோம்.  இரண்டு சத்தியங்களை அறிந்திட்டோம். ஒன்று, தேவன் இன்றும் பேசுகிறார். இரண்டு, மனிதன் விரும்பினால், அல்லது விரும்பும் நிலையில் இருந்தால், அல்லது செவிசாய்த்தால்,  அவர் குரலை கேட்டிடுவான்.

நம்முடைய பயணத்தில் நாம் ஒரு வலிமையானனின் கதையை ஆரம்பித்து பாதியில் நின்றுவிட்டோம்.  இவன் ஆண்டவரின் குரலைக் கேட்டு பழகினவன், ஆண்டவரின் மனதை இடிபோல் தொனித்தவன். ஆனால் மனஅழுத்தம் அவனை குகைக்குள் தள்ளியிருந்தது….இங்குதான் நாம் நின்றோம்.  குகையிலிருந்தவனிடம் தேவன் பேசினாரா என்று வினவினோம்?
எலியா, ஒரு உண்மை ஊழியன், தேவனுக்காக பராக்கிரம் செய்தவன் இப்போது ஏமாற்றம், சோர்வு, அழுத்தம், விரக்தி, பயம்  போன்றவைகளுக்கு இரையாகி தன்னை ஒளித்துக்கொண்டான்.  எலியாவுக்கு நேர்ந்தது நமக்கு நேரிடுகிறது.  நேரிடவேண்டும் என்பதல்ல நம் பாடம்.   சுயபரிதாபம் எனும் வைரஸ் கிருமி நம்மை தாக்கும்போது நாமும் நம்மை இப்படி தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதா நியதி? இல்லை இல்லை.   

அவன் ஒளிந்துகொண்டிருந்த இடத்தை தேடி தேவன் வந்தார். ஆம் குகையை தேடி.  நாம் எப்பேர்ப்பட்ட குகைக்குள் நம்மை மறைத்துகொண்டாலும், தேவன் நம்மை பின்தொடர்ந்துவருவார்.  ஆனால், முக்கியமான சம்பவம் இனிதான் ….கர்த்தர் சொன்னார் நான் கடந்துபோவேன் என்று…
பலத்த காற்று…
பயங்கர பூமியதிர்ச்சி…
பெரும் நெருப்பு

நீங்கள் கூர்ந்து கவனித்தால், இவைகள் ஒவ்வொன்றும் நம்முடைய கவனத்திற்கு அழைப்புக்கொடுப்பவை.  நம்முடைய செவிசாய்த்தலை, நம்முடைய கவனத்தை இவைகள் ஈர்க்கின்றன. இம்மூன்றும் பெருஞ்சத்தத்தை, ஆரவாரத்தை உண்டாக்கக்கூடியவை.  கர்த்தர் இம்மூன்றிலும் காணப்படவில்லை? ஏன்? கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
(தொனிக்கும்…)


HE LEADS ME IN THE PATH OF RIGHTEOUSNESS | PROMISE WORD | OCTOBER 24 (ENGLISH)

  PROMISE – OCT 2024 IN THE PATH OF RIGTEOUSNESS Psa 23:3   He restoreth my soul: he leadeth me in the paths of righteousness for his ...