Friday, May 22, 2020

ஆரவரிக்கும் மூன்று (தேவனுடைய ஒலிப்பெருக்கி 8)




 ஆரவரிக்கும் மூன்று…
தேவனுடைய ஒலிப்பெருக்கி தொடரில் நாம் இரண்டு காரியங்களை கவனித்தோம்.  இரண்டு சத்தியங்களை அறிந்திட்டோம். ஒன்று, தேவன் இன்றும் பேசுகிறார். இரண்டு, மனிதன் விரும்பினால், அல்லது விரும்பும் நிலையில் இருந்தால், அல்லது செவிசாய்த்தால்,  அவர் குரலை கேட்டிடுவான்.

நம்முடைய பயணத்தில் நாம் ஒரு வலிமையானனின் கதையை ஆரம்பித்து பாதியில் நின்றுவிட்டோம்.  இவன் ஆண்டவரின் குரலைக் கேட்டு பழகினவன், ஆண்டவரின் மனதை இடிபோல் தொனித்தவன். ஆனால் மனஅழுத்தம் அவனை குகைக்குள் தள்ளியிருந்தது….இங்குதான் நாம் நின்றோம்.  குகையிலிருந்தவனிடம் தேவன் பேசினாரா என்று வினவினோம்?
எலியா, ஒரு உண்மை ஊழியன், தேவனுக்காக பராக்கிரம் செய்தவன் இப்போது ஏமாற்றம், சோர்வு, அழுத்தம், விரக்தி, பயம்  போன்றவைகளுக்கு இரையாகி தன்னை ஒளித்துக்கொண்டான்.  எலியாவுக்கு நேர்ந்தது நமக்கு நேரிடுகிறது.  நேரிடவேண்டும் என்பதல்ல நம் பாடம்.   சுயபரிதாபம் எனும் வைரஸ் கிருமி நம்மை தாக்கும்போது நாமும் நம்மை இப்படி தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதா நியதி? இல்லை இல்லை.   

அவன் ஒளிந்துகொண்டிருந்த இடத்தை தேடி தேவன் வந்தார். ஆம் குகையை தேடி.  நாம் எப்பேர்ப்பட்ட குகைக்குள் நம்மை மறைத்துகொண்டாலும், தேவன் நம்மை பின்தொடர்ந்துவருவார்.  ஆனால், முக்கியமான சம்பவம் இனிதான் ….கர்த்தர் சொன்னார் நான் கடந்துபோவேன் என்று…
பலத்த காற்று…
பயங்கர பூமியதிர்ச்சி…
பெரும் நெருப்பு

நீங்கள் கூர்ந்து கவனித்தால், இவைகள் ஒவ்வொன்றும் நம்முடைய கவனத்திற்கு அழைப்புக்கொடுப்பவை.  நம்முடைய செவிசாய்த்தலை, நம்முடைய கவனத்தை இவைகள் ஈர்க்கின்றன. இம்மூன்றும் பெருஞ்சத்தத்தை, ஆரவாரத்தை உண்டாக்கக்கூடியவை.  கர்த்தர் இம்மூன்றிலும் காணப்படவில்லை? ஏன்? கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
(தொனிக்கும்…)


No comments:

Post a Comment

I WILL COME | PROMISE | GOD'S SHADOW MINISTRIES | MARCH 2025

  I WILL COME AND HEAL HIM PROMISE | MARCH 2025 Mat hew 8:7   And Jesus saith unto him, I will come and heal him   Dearly beloved...