அதை அவன்
கேட்டபோது…
நம்முடைய முந்தைய பதிவில், ஒரு முக்கியமான கேள்வியோடு
முடித்தோம். அரசின் பேச்சை மக்களும், மக்களின்
பேச்சை அரசும் கேட்க மறுக்கும் ஒரு சூழலில், மகேசன் பேச்சை, பொதுவான மக்களாகட்டும்,
தேவனுடைய பிள்ளைகளாகட்டும் கேட்கிறார்களா? ஒரு தேவனுடைய ஊழியர் நேற்றைய பதிவிற்கு தன் பிரதலிப்பை
தெரிவிக்கையில் "படைத்தவனின் சத்தத்தை கேட்க தவறினால் விபரீதமாய் போகும்"
என்றார். கேட்பதற்கு பயமாகத் தான் உள்ளது. ஆனாலும், கடந்த, நிகழ்காழ சம்பவங்கள், மற்றும் வருங்கால தீர்க்கத்தரிசனங்கள்
யாவும் செவிக்கொடுக்காமல் போகும்போது அதற்கான
விலைக்கிரயத்தை நாம் செலுத்தவேண்டியிருக்கும் என்றே குறிப்பிடுகிறது.
சிலர், 'இறைவன் இப்போதெல்லாம் பேசறதில்லீங்க!' என்று அபிப்பிராயப்படுகின்றனர். சிலர் தாங்கள்
எதிர்பார்த்த வண்ணம் பேசவேண்டும் என்று காத்திருக்கின்றனர். சிலர் இறைவன் அமைதியாகவிட்டார் என்று முடிக்கின்றனர். ஆனால் தேவன் அமைதியாகவே இல்லை. அவர் எல்லா காலத்திலும், எல்லா சூழ்நிலைகளிலும்,
தம்முடைய உள்ளத்தை, தம்முடைய சிந்தையை, தம்முடைய எண்ணங்களை, தம்முடைய வார்த்தைகளை,
தம்முடைய எதிர்ப்பார்ப்புகளை, தம்முடைய திருசித்தத்தை வெளிப்படுத்திக்கொண்டே வருகிறார்.
பிரச்னை பேசுபவரிடத்தில் இல்லை, பிரச்சனை கேட்பவன்
இடத்திலே தான்!
பாருங்களேன்! நாம் எவ்வளவு தான் கூச்சல் போட்டாலும், எவ்வளவு
தான் ஒலிப்பெருக்கியின் அளவை அதிகரித்தாலும் (1) செவிடனாலும் (2) காதுகளில் அடைப்புள்ளவனாலும் கேட்கமுடியாது.
தேவன்
இன்றும் பேசுகிறார்.
சொல்லப்போனால்,
இன்னும் உரக்கமாக பேசுகிறார்.
கேட்கிறதற்கு
காதுள்ளவன் கேட்கிறான்.
கேட்டும்
கேளாதவனைப் போல் நாம் இருக்கலாகாது
கேட்கிறவன்
என்ன செய்யவேண்டும் என்று நிதானிக்கவேண்டும்
தம்
ஓசைக்கு, தம் குரலுக்கு, தம் வார்த்தைக்கு ஒரு சீறிய பிரதிபலிப்பை, செயல்முனைப்பினை
தேவன் நம்மிடம் எதிர்பார்க்கிறார் என்பது திண்ணம்….கர்த்தர் கர்ஜனையிட்டால் மரித்தவனும்
உயிரோடு எழும்புவான். லாசருவுக்கு அது தெரியும்.
வரலாற்றில் தடம்பதித்த ஒரு உன்னதமான தேவமனிதன். அவன் தேவனுக்கு பெரிய காரியங்களை செய்தவன், தேவகாரியங்களில்
வைராக்கியம் கொண்டவன், தேவவிரோதிகளை துவம்சம் செய்தவன். அவன் சாத்தானுக்கு சாவுமணி அடிக்கும் வல்லமை பெற்றவன்.
ஆனாலும், அவனுடைய வாழ்க்கையில், ஒரு கட்டத்தில், இந்த ஜாம்பவான், சாத்தானின் பிரதிநிதி சொன்ன ஒரு சொல்லின் நிமித்தம், ஒரு கெபிக்குள், ஒரு
குகைக்குள் தன்னை ஓளித்துக்கொண்டான்…குகைக்கும் அவனுக்கு சம்பந்தமேயில்லை…..சரி குகைக்குள்
தன்னை அடைத்துக்கொண்ட அவனை ஆண்டவர் சந்தித்தாரா….குகைக்குள் இருந்துகொண்டு அவன் தேவகுரலை
கேட்டானா?
(தொனிக்கும்)
அவன் தேவகுரலை கேட்டானா? eagerly moving to the next post
ReplyDelete