என்
ஆடுகள் என் சத்தத்திற்கு….
நாம் வாழும் உலகில், அதுவும் குறிப்பாக
இந்த தகவல்தொழில்நுட்ப யுகத்தில், நம்மை சுற்றிலும் காரியங்கள் பரபரப்பாக நடந்துகொண்டிருப்பது
மாத்திரமல்ல, எங்கு பார்க்கிலும் சத்தம், கூச்சல்,
பற்பல திசைகளிலிருந்து எழும்பு குரல்களின் ஆதிக்கம். அது ஒரு தொலைக்காட்சி சேனலாக இருந்தாலும் சரி அல்லது
சமூக வளைதளமாக இருந்தாலும் சரி, அபிப்பிராயங்கள், மாற்று அபிப்பிராயங்கள், வாதங்கள், விவாதங்கள், கருத்துமோதல்கள் என்று எங்கு
பார்க்கிலும் சத்தங்களின் சங்கமம் அரங்கேறிக்கொண்டேபோகிறது. பலசமயங்களில், இந்த விவாதங்கள் நம்மை கட்டியெழுப்பாமல்
காதுகளை கலவரப்படுத்தி காயப்படுத்துகின்றன.
ஒரு கற்பனை காட்சி. ஒரு சிறு குழுவில் அல்லது
கூட்டத்தில் நின்றுகொண்டிருக்கும் என் மகனை நான் கூவி அழைப்பது எளிது. என் சத்தம் அவன்
கவனத்தை எளிதில் ஈர்க்கும். ஆனாலும் ஒரு திரளான்
கூட்டத்தின் நடுவில், கூச்சலும் குழப்புமான ஒரு மக்கள் கடலில் அவன் சிக்கியிருப்பானானல், என்னால் அவனை அடையமுடியாது. என் குரலையும் அவனால்
கேட்கமுடியாது. எவ்வளவுதான் சத்தம் போட்டாலும். ஏன்? அவன்
காதுகள் சுற்றியுள்ள சத்தங்களின் திரளினால் அடைக்கப்பட்டுள்ளது. உண்மையில் என்னை கேட்பது அவனுக்கு எளிதாக இராது. அதிக கவனம், குவிமையம், கவனக்கூர்மை இருந்தால்,
ஒருவேளை, அவனால் அந்த கூட்டத்தில் என் குரலை அவனால் கேட்டிருக்கமுடியும். ஒருவேளை ஒரு
புனைப்பெயர் அல்லது செல்லப்பெயரை வைத்துக் கூப்பிட்டால் அவனை அடையக்கூடிய வாய்ப்புகள்
இருக்கலாம்…
இந்த வேதப்பகுதியில், நம்முடைய நோக்கம்,
பொதுவாகவே ஆண்டவர் என்ன சொன்னார்? எலியா என்னை சொன்னார்? என்றே இருக்கும். நம்முடைய
கவனத்தை தாண்டிச்செல்லும் ஒரு காரியம், ஒரு முக்கியமான குறிப்பு, அதுவும் குறிப்பாக
இந்த காலக்கட்டத்தில், என்ன்வென்றால், சோர்வுற்று மனநிலையிலும் தேவனுடைய் குரலை குறித்த
ஒரு கூர்மையான கவனிப்பு இவனுக்குள் இருந்தது தான்.
எலியாவை சந்தித்த தேவன் முதலில் கேட்ட
கேள்வியும், அடுத்த கேட்ட கேள்வியும் ஒன்றே!
எலியா, இங்கே என்ன செய்கிறாய்? இங்கே என்பது
கெபியை காண்பிக்கிறது. கெபியிலிருந்து வெளியேறி
மலையில் நின்றிட தேவன் அழைக்கிறார்.
தேவன் கடந்துபோனார் என்று வேதம் பதிவிடுகிறது. ஒரு பலத்த
காற்று, ஒரு பெரிய பூமியதிர்ச்சி, ஒரு நெருப்ப அங்கே கடந்துசென்றது. எலியாவோ இன்னும் கெபியில். இவைகளில் ஒன்றாகிலும்
அவனை வெளியே கொண்டுவரவில்லை. ஒருவேளை அவன் தன்னை இந்த சீற்றங்களிலிருந்து பாதுக்காக
பதுங்கியிருந்தானா? ஆனாலும், அவன் எப்படி அசையாமல்
இருந்திருப்பான்.
எலியாமெல்லிய சத்தத்தை கேட்டபோது சால்வையினால் தன் முகத்தை மூடி, கர்த்தரை சந்திக்க வெளியே வந்தான். அந்த மெல்லிய சத்தம் என்ன சொல்லிற்று என்று வேதம்
நமக்கு வெளிப்படுத்தவில்லை. அந்த மெல்லிய
சத்தம் எலியாவுக்கு என்ன சொல்லியிருக்கும்?
நெருப்பு, நிலஅதிர்வு மற்றும் காற்றின் களேபரம் சூழந்த ஒரு நிலையில் அந்த மெல்லிய
சத்தத்தை எப்படியாக அவன் உணர்ந்தான்? நாம்
என்ன சொல்லுவோம்? எலியாவும் நம்மை போன்ற பாடுள்ளவன் தான் என்று எண்ணி, நம்மடைய ஏமாற்றத்திலும் அவனை பற்றி
சிந்தித்து நம்மை ஆறுதல்படுத்திக்கொள்கிறோம். ஆனால் எலியா நீங்கள் நினைக்கிற மாதிரி
ஒரு சாதரண மனிதன் அல்ல! ஏன் தெரியுமா?
(ஒலிப்பெருக்கி தொனிக்கும்…)
No comments:
Post a Comment