கேள்விப்படும்போது…(தேவனுடைய ஒலிபெருக்கி 2)
சில ஆன்மீக
மருத்துவர்கள், இந்த நாட்களில், பிரச்சனைகள் உங்களை வாட்டிவதைக்கும்போது, கவலைகள் உங்களை
உருக்குலைக்கும்போது, துர்ச்செய்தி உங்களை பயமுறுத்தும்போது, உங்களை பெலவீனப்படுத்தும்
சிந்தனைகளுக்கு எல்லாம் தாள்பாழ் போட்டு, ஒரு
தியானநிலை, அமைதிநிலைக்கு சென்றால், உங்கள் மனம் புத்துணர்வடையும், எண்ணம் புதுப்பிக்கப்படும்,
ஆத்துமா உயிர்பிக்கப்படும் என்று போதிக்கின்றனர். உடல்ரீதியான பிரச்சனைகளுக்கு மனரீதியிலான தீர்வு,
தியானம் ஆரோக்கியத்தை கொண்டுவருமோ? வந்தால் நல்லது. நம்முடைய தியானங்கள், மனபயிற்சிகளின் மூலம் வைரஸ்
கிருமிகளுக்கு விலகியிருக்கமுடியுமா?
நேற்றைய
தினம், இந்தநாட்களில் அதிகமாய் பேசப்படும், பகிரப்படும், உச்சரிக்கப்படும் அநேக சொற்றோடர்கள்,
அருஞ்சொற்களை பட்டியிலிட்டேன். அதோடுகூட இன்னொன்றையும்
நான் சேர்க்க விரும்புகிறேன்: எதிர்ப்புசக்தி
(Immunity). ஆம், பரவிவரும் பெருந்தொற்றிலிருந்து
தங்களை காத்துக்கொள்ள, அதனை எதிர்த்துவென்றிட, மக்கள் எல்லோரும் தங்கள் சரீர எதிர்ப்பு
சக்தியினை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்று அரசாங்கம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
அநேக மருந்துகள், குறிப்பாக மூலிகை குடிநீர்கள், மருத்துவ கசாயங்கள் பரிந்துரைக்கப்பட்டும்
வருகின்றன. அதேசமயம், இந்த எதிர்ப்புசக்தி ஊக்குவிப்பான்களை நாம் எவ்வளவு தான் எடுத்தாலும்,
நமக்கு இந்த பெருந்தொற்று அண்டவே அண்டாது என்று அறுதியிட்டு சொல்லமுடியாதாம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
தியானமும்
தினமும் கபசுர குடிநீரும் உதவலாம். ஆம், ஓரளவுக்கு. ஆனாலும், நாம் எதிர்நோக்கிக்கொண்டிருப்பது ஒரு குறைவற்ற,
உலகளாவிய, எல்லோருக்கும் சென்ற அடையக்கூடிய ஒரு எளிதான, முழுமையான், நிச்சயமான தீர்வு
தானே?
இந்த நாட்களில்
நம் செவிகள், மருத்துவங்கள், எதிர்ப்புசக்தி முறைகள், தியான அலோசனைகள், ஊடகச்செய்தி
பேரலைகள் (ஊடகத்தின் செய்தி பரவும் வீரியம்) போன்ற காரியங்களால் நிரம்பி காணப்படுகிறது. உண்மையில் இவைகள் நம்மை திசைகாட்டாமால், திசையினை
திருப்பிக்கொண்டிருக்கின்றன என்று தான் சொல்லவேண்டும். கடைசிகாலங்களை
பற்றி பேசும்போது இயேசுவானவர் தீர்க்கத்தரிசனமாக சொன்ன ஒரு காரியம், "யுத்தங்களையும், யுத்தங்களை பற்றிய செய்திகளையும்
கேள்விப்படும்போது கலங்கவேண்டாம்…(மாற்கு 13:7) என்றார். அவர் சொல்லவரும் கருத்து
என்ன?
யுத்தங்களை
கேள்விபடுவதற்கும், யுத்தங்களை பற்றிய செய்திகளை கேள்விப்படுவதற்கும் உள்ள வேறுபாடு
என்ன?
கிரேக்கத்தில்
செய்திகள் என்ற வார்த்தை அகோயே என்று உள்ளது.
அகோயே என்பதற்கு கேட்பது, செவிகொடுப்பது என்று பொருள்.
இந்த நாட்களில்
நமக்கு செய்தியை யார் கொண்டுவருகிறார்கள்? எப்படிப்பட்ட செய்திகளை நாம் கேட்கிறோம்,
கேள்விப்படுகிறோம்?
கவனியுங்கள்.
இயேசு யுத்தங்களை குறித்த காலத்தை மட்டும் குறிப்பிடவில்லை. யுத்தங்களை
குறித்த செய்திகளை கேள்விப்படுவீர்கள் என்கிறார்.
ஒரு தலைவர்
ஒரு முறை, நாம் கொரோனாவிற்கு எதிரான ஓர் யுத்தத்தில் இருக்கிறோம் என்றார். இயேசு சொன்னதில் 'யுத்தம்' என்ற வார்த்தைக்கு பதிலாக
'வைரஸ்' என்று வைத்துப் படித்து பாருங்கள்.
சமூகவலைதள
மற்றும் தொலைக்காட்சி ஊடகச்செய்திகளும், அறிக்கைகளும், பதிவுகளும் நம்மை கலங்கடிக்கலாம். கலங்ககடிக்கும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே,
இன்று நாம் கண்கூடாக பார்த்துகொண்டிருக்கும்
காரியத்தைத்தான் இயேசு முன்னுரைத்தாரோ?
கடைசியாக
நீங்கள் கேட்ட செய்தி உங்களுக்கு என்னத்தை தெரிவித்தது? அல்லது தெளிவுபடுத்தியது? ?!?!
(ஒலி தொனிக்கும்…)
kadaisiyaaga ketta seidhi, Nesarin saththam : Vasandhakaalathiruku aayathapaduvom :-)
ReplyDelete