Friday, May 15, 2020

கேள் இஸ்ரவேலே | தேவனுடைய ஒலிப்பெருக்கி(3)

தேவனுடைய ஒலிப்பெருக்கி(3): கேள் இஸ்ரவேலே…

நம்மில் சிலருக்கு இந்த பழக்கம் கண்டிப்பாக இருக்கும்.  காதை குடாய்ந்துகொண்டே இருப்பது.  ஒருசில சமயம் அது விபத்திலும் முடிவதுண்டு.   காதில் நுழைக்கும் பட்ஸ் அல்லது காதிற்குள் அழையா விருந்தாளியாக நுழையும் பூச்சி, இரண்டுமே பிரச்சனை தான்.
                                                                                                                                                                        சமீபத்தில், காதுகளின் பாதுகாப்பை குறித்து நான் வாசித்த ஒரு ஆங்கில இணைய பதிவு இப்படியாக ஆரம்பிக்கிறது.
நம்முடைய காதுகள் மிகவும் மிருதுவானவை. காதுகளின் உட்புறத்திற்கு ஏதாகிலும் பாதிப்பு ஏற்பட்டால், நாம் கேட்கும்  திறனை இழந்துவிடுவோம்.   உங்கள் காதுகளின் உட்பாகத்தை நீங்கள் பாதுகாக்க வேண்டுமானால்,  ஒரு ஆபத்தான நிலையில் என்ன செய்யவேண்டும் என்பதை நீங்கள் அறிந்திருக்கவேண்டும்.
                                                                                                                                                                   வெளிப்புறம் உடபுறத்தின் நிழல்.  வெளிப்புறம் உடபுறத்தின் பாதுகாப்பு.
                                                                                                                                                                                  சரீர உணர்வுகளைப் போல, நமக்கு ஆவிக்குரிய உணர்வுகளும் உண்டு.  கண்களினால் பார்க்கிறோம்,  நாசியினால் சுவாசிக்கிறோம், காதுகளினால் கேட்கிறோம்.  நாவினால்  ருசிக்கிறோம், தோளினால் உணர்கிறோம். உலகில் நாம் பிறக்கும்போதே  இவைகளோடு பிறக்கிறோம்.  இந்த உணர்வுகளுக்கு ஒரு ஆவிக்குரிய பரிமாணமும் உண்டு.  நம்முடைய மறுபிறப்பில்  அதற்கான வாசல்கள் திறக்கப்படுகிறது.  மனக்கண்களின் பிரகாசம்!
                                                                                                                                                                              இயேசு ஒரு முறை "நீங்கள் கேட்கிறதை கவனியுங்கள்….(மாற்கு 4:24)" என்றார்.
                                                                                                                                                          பலவேளைகளில், நாம் கேட்கக்கூடாததை கேட்கிறோம். கேட்கவேண்டியவைகளை கேட்கத் தவறுகிறோம்.  கேட்பதற்கு மாத்திரமல்ல, இது பார்வை, சுவாசம், ருசி மற்றும் தொடுதல் அனைத்திற்கும் பொருந்தும்.
ஒரு அந்நிய பொருள், ஒரு குறுகுறுக்கும் பூழு உங்கள் செவித்திறனை பாதிக்குமானால், அவசியமற்ற செய்தி, உதவாத வம்பு, மதியற்ற  இழுக்குபேச்சு, அறிவில்லா விவாதம், கனிகொடாத கலந்துரையாடல், போன்ற எல்லாமே உங்கள் 'காதுமண்டலத்தின்' உள்ளான ஆவிக்குரிய பகுதியை கெடுத்துப்போட்டு…..தேவனுடைய சத்தத்தை கேட்கக்கூடாதபடிக்கு உங்களை நிரந்தர செவிடனாக மாற்றிவிடும்!
                                                                                                                                                                          உங்கள் காதுகள் இப்போது எப்படி உள்ளது?  நல்லமுறையில் எந்தவொரு அழுக்கும், தூசியும் படியா வகையில் அது பராமரிக்கப்படுக்கின்றதா?   அல்லது உள்ளே ஏதோ ஔர் பட்ஸ் அல்லது பூச்சி மாட்டிக்கொண்டுள்ளதா?
(தொனிக்கும்….)




No comments:

Post a Comment

HE LEADS ME IN THE PATH OF RIGHTEOUSNESS | PROMISE WORD | OCTOBER 24 (ENGLISH)

  PROMISE – OCT 2024 IN THE PATH OF RIGTEOUSNESS Psa 23:3   He restoreth my soul: he leadeth me in the paths of righteousness for his ...