Monday, May 4, 2020

வெளியே வா...(இயேசு கண்ணீர்விட்டார்…(உவமேயத்தின் உண்மை முடிந்தது)


வெளியே வா!                                                                                                                                                                    இயேசு கண்ணீர்விட்டார்…(உவமேயத்தின் உண்மை முடிந்தது)

                                                                                                                                                      நம் சமீபத்திய பதிவுகளில்,  இயேசு கண்ணீர்விட்டதின் காரண காரியத்தை கூர்ந்து கவனித்து அதன் ஆழத்தை ஆராய்ந்து அறியும் படலத்தில் இறங்கினோம். தன் உயிர் நண்பனாய உயிரோடு எழுப்பபோகிறோம் என்பதை அறிந்தும்  அவர் ஏன் கண்ணீர் விடவேண்டும்?  மகிழ்ச்சியான முடிவு நமக்கு முன்னாக இருக்கும்போது நமக்கு எப்படி அழுகை வரும்?
                                                                                                                                           ஆனாலும் என் சிந்தனை லாசருவின் கல்லறைக்கு அப்பால் உள்ள உலகத்த்தை, உண்மையை, உணர்வினை நோக்கியே பயணித்தது.   இயேசுவின விழிநிர் எனக்கு ஒரு ஆழமான, ஒரு பொருட்செரிவுள்ள, ஒரு பெரிய சத்தியத்தை விளக்குவதாக தோன்றியது.  என்னால் ஒரு அழகான பொருளை அளந்துபார்க்கமுடிந்தது.  ஓர் உள்பார்வை.  ஒரு தற்பரிசோதனை. என் ஆத்துமாவோடு ஓர் புலன்விசாரனை.  இயேசுவின் கண்ணீர், உணரவேண்டிய ஓர் உவமை.
எனக்கு எதிரோலித்தவைகள்...
                                                                                                                                        லாசருவின் கல்லறையை கண்டு …. இயேசு கண்ணீர்விட்டார்..
இல்லை இல்லை…
அழிந்துபோகும் ஆத்துமாக்களைக் கண்டு…..(பாவம்: அழிவு)
அகோரப்பட்ட தேவசாயலைக் கண்டு..(பாவம்:மகிமை இழந்தான்)
அக்கிரமமாய் மாறின் அன்பின் வடிவைக் கண்டு (பாவம்: பகையின் மேல் அன்பு)
ஆலயங்கள் கல்லறைகளாவதைக் கண்டு (மனிதனுக்குள் மகேசனா? தேமனிதனுக்குள் மரணமா?)
அநீதத்தினால் விளைந்த பாதகத்தைகண்டு (தலைக்கவசம்…தப்பும் நரகம்)
அசட்டையினால் உண்டான கேட்டைக்கண்டு(பாவத்தில் அடக்கமாவதா?  சங்கிலிகள் முறிந்து வெளியேறுவதா?
அன்று லாசருவின் கதை கல்லறையில் முடியவில்லை..அற்புத உயிர்த்தெழுதலில் முடிந்தது! அல்லேலுயா!
இயேசு கண்ணீர்விட்டார் என்பத் ஒன்று.  அவருடைய கண்ணிரை தொடர்ந்து ஒரு உருக்கமான பிரசங்கமன்று.   அவருடைய கண்ணிருக்கு பின்பாக பிறந்த ஒரு அதிரும் கட்டளை….வெளியே வா!....அவன் வெளியே வந்தான்!
நான் எனக்கே எழுப்பிடும் கேள்வி (நீங்கள் விரும்பினாலும் உங்களுக்கே எழுப்பலாம்)…இயேசுவைப் போல் நானும் கண்ணீர் விடுகிறேனா?......இயேசு எனக்குள் இருந்தால்….நானும் அவரைப் போல் ….
இயேசுவின் விழிநீர் என் விழிநீர் ஆகுமானால்….முடிவு மகிமையான உயிர்த்தெழுதல்!
உயிர்த்தெழுந்த ஆத்துமா!
உயிர்த்தெழுந்த ஜீவன்!
உயிர்த்தெழுந்த நோக்கம்!
ஆமென்!



1 comment:

HE LEADS ME IN THE PATH OF RIGHTEOUSNESS | PROMISE WORD | OCTOBER 24 (ENGLISH)

  PROMISE – OCT 2024 IN THE PATH OF RIGTEOUSNESS Psa 23:3   He restoreth my soul: he leadeth me in the paths of righteousness for his ...