இவருக்கு
செவிகொடுங்கள்: தேவனுடைய ஒலிப்பெருக்கி(4)
கேபிள் தொலைக்காட்சிகளும் தனியார் சேனல்களும்
வருவதற்கு முன்பாகவே, ஒரேயொரு தேசிய தொலைக்காட்சி
சேனல் மட்டுமே இருந்தது - தூர்தர்ஷன். தூர்தர்ஷன் என்றால் தொலைதூர பார்வை என்று பொருள்.
இன்றைக்கு இதனை நாம் சுருக்கமாக DD என்று அழைக்கிறோம். தொலைக்காட்சி அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக, நமக்கு
ஆல் இந்தியா ரேடியோ மட்டும் தான் இருந்தது.
ஆல் இந்தியா ரேடியோவின் வானோலி நேரம்
ஆகாஷ்வானி என்று அழைக்கப்படுகிறது. ஆகாஷ்வானி
என்றால் "ஆகாயத்திலிருந்து வரும் சத்தம்" அல்லது வானத்திலிருந்து வரும் சத்தம்" என்று பொருள்.
ஆரம்பநாட்களில் ஒருசில நிகழ்ச்சிகள் மட்டுமே
இருந்தன. அதில் மிகவும் முக்கியமானது செய்திகள்
நிகழ்ச்சி. 80-களில் நம் வீட்டில் இருக்கும்
பெரியவர்கள் தங்கள் பிள்ளைகள் தவறாமல் ஆங்கில செய்தி நிகழ்ச்சிகளை பார்க்கவேண்டும்
என்று வலியுறுத்துவார்கள். செய்தி வாசிப்பவர்கள் ஆங்கிலத்தை உச்சரிக்கும் விதம், சொல்வளம்,
இலக்கணம் போன்றவைகளை நன்றாக கவனித்துக்கொண்டு ஆங்கில நடையை பயிலவேண்டும் என்று விரும்புவார்கள். நாள் ஒன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு செய்தி நேரங்கள்
இருக்கும். என்ன செய்தியாக இருந்தாலும் சரி,
நம்முடைய நாடு, மாநிலம், விளையாட்டு, திரைப்படம், சீதோஷன நிலை, சர்வதேச நிகழ்வுகள்
என்று எதுவாக இருந்தாலும் சரி..தகவல்களை அறிந்துகொள்ள நமக்கு DD செய்திகள் இருந்தாலே
போதும் என்று இருந்தது. அது அந்த காலம்….பொன்னான காலம்…என்றும் சொல்லலாம்!
வருடம் 2020. ஒரு இணையதள கட்டுரை சொல்கிறது, உலகம் முழுவதும்
இப்போது 375 24 மணி நேரம் ஒடக்கூடிய செய்தி சேனல்கள் உள்ளனவாம். அவற்றில் 82 இந்தியாவுக்குள் உண்டு. உலக நிகழ்வுகளை எல்லாம் கவனிக்க, இத்துணை செய்தி
சேனல்களா? இதற்கு பின்னால் உள்ள கதை தான் என்ன?
இன்று, நம்மை சுற்றிலும் இவ்வளவு காரியங்கள்
இருக்கும்போது, மக்கள் கேட்பது என்னவென்றால், எந்த செய்தி சேனலை நான் நம்பமுடியும். எது உண்மையில் நடுநிலையான, ஒருபக்கம் சாராத சேனல்?
தூர்தர்ஷன்
மற்றும் ஆகாஷ்வானி இன்றைக்கு
மறக்கப்பட்ட பெயர்களாக மாறிவிட்டன….அப்படித்தானே?
ஒரு கேள்வி. ஒரு வினாடி வினா. பின்வரும் வாக்கியத்தை படிக்கும்போது உங்களுக்கு
உடனடியாக நினைவுக்கு வருவது எது?
வானத்திலிருந்து
ஒரு சத்தம் உண்டாகி….அல்லது ஆகாஷ்வானி உண்டாகி..இவருக்கு
(தொனிக்கும்…)
Matthew 3:17 :-!
ReplyDeleteVery Nice....
ReplyDelete