3-வது ஊரடங்கும் ஓய்ந்துவிட்டது. இன்று 4-வது தொடங்கியுள்ளது. 5, 6, 7 என்று தொடருமா? தெரியவில்லை.
50 நாட்களும் மேல்….ஆனால்
இன்று சாலைகளில் வாகனங்கள் தடையின்றி பறக்கின்றன,
கடைகளில் மக்கள் விடுதலையாய் வலம்வருகிறார்கள்,
வியாபாரம் சூடுபிடிக்கிறது. புதிய இயல்பு
நிலை வந்துவிட்டதோ?
இந்த புதிய இயல்பின்
வழிமுறைகள் எப்படியாக இருக்கும் என்று என்னால் யூகிக்கமுடியவில்லை. ஆனாலும், ஒரு காரியத்தில் அதன் சித்தாந்தம் உறுதிபடுகிறது
போல் தோன்றுகிறது.. இந்த புதிய இயல்பில் மதுப்பிரியர்களுக்கு அடைப்பு இல்லை, அடங்கதேவையும்
இல்லை. நான் ஊரடங்கை சொல்கிறேன். ஆனாலும்,
வழிபாடு ஸ்தலங்களில் வழிபட தடை நீடிக்கிறது.
ஒரு புதுவித மதவழிபாடு முன்வைக்கப்படுகிறதோ? வழிபாட்டை விட்டுத்தள்ளுங்கள் விலைகொடுத்து வாங்கி,
அதிலே வெறித்திருங்கள்! ஆம் புது இயல்பு நிலை!
நாம் சமீபத்தில் கேட்ட,
கவனித்த இரண்டு முக்கியமான செய்திகளை உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். அதன் ஒற்றுமை வேற்றுமை கவனியுங்கள்.
1.கோயம்பேடு சந்தையின்
சிக்கலுக்கான முழுமுதல் காரணம், வியாபரிகள்(கடையை முடுவதற்கான) அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு
செவிகொடுக்காமல் போனதே என்கிறது செய்தி. அவர்களுடைய அசட்டைதனம் மற்றும் மெத்தனத்தின் பல்னை நோயாளிகளின்
அசுரவேக பெருக்கத்தில் காணமுடிகிறது. எண்ணிக்கை முடிந்தபாடில்லை…
2.குடிமக்களை குதூகலப்படுத்தவும்,
காலியான கஜானாவை நிரப்பவும் அரசாங்கம் மதுவின் சொர்க்கவாசலை திறந்துவிட்டு, அதன் போதையில்
மிதந்துகொண்டிருக்க மக்களுக்கு உதவியுள்ளது. அதற்கு எதிரான மக்களின் போராட்டங்கள், வேண்டுதல்கள்,கோரிக்கைகள்,
ஜெபங்கள் எல்லாமே செவிடன் காதில் ஊதிய சங்கைப்
போல் தான் மாறிவிட்டது. கொள்கைமுடிவை
எப்படியும் கொண்டுவரவேண்டும் என்ற அரசாங்கத்தின் உறுதி இன்று கோடிக்கணக்களில் வருமானத்தை
பார்க்க வழிசெய்துள்ளது. வருமானம் விபரீதத்தில்
முடியுமா? அப்படி நடக்கக்கூடாது. ஆனால் யாருக்கு தெரியும்?
அரசாங்கத்தின் கூற்றை
வியாபாரிகள் கேட்கவில்லை.
மக்களின் கூற்றை அரசாங்கக்
கேட்பதில்லை.
அரசயும், மக்களையும் விடுவோம். படைத்தவனின்
கூற்றை அல்லது படைத்தவன் பேசும்போது, மக்கள் உண்மையாக கேட்கிறார்களா?
(தொனி தொடரும்…)
No comments:
Post a Comment