Wednesday, May 20, 2020

இதைக் குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்...(தேவனுடைய ஒலிப்பெருக்கி 7)



இதைக் குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்..

அசுரபெலன் கொண்டவன் அதன் அழைப்பை மறந்து தன்னை தானே தனிமைபடுத்திகொள்கிறான்.  அது அரசாங்கம், இல்லை இல்லை, ஆண்டவர் ஆணையிடாத, ஒரு தனிமை.

ஆண்டவரின் சத்தத்தை அனுதினமும் கேட்டவன்,
ஆண்டவருக்காக பேசினவன், அரசனுக்கு சிம்மசொப்பனமாக இருந்தவன், இப்போது பொந்துக்குள் பதுங்கின எலியை போல் தன்னை மறைத்துக்கொண்டான்….

இந்த குகை மனிதனின் கதையை நாம் தொடர்வதற்கு முன்பாக, இன்று, நான் ஒரு அதிமுக்கியமான, அவசியமான காரியத்தை முன்நிறுத்த விரும்புகிறேன். இது  இயேசு பேசின ஒரு வார்த்தை.   தேவனுடைய ஓலிப்பெருக்கி என்ற தலைப்பின் கீழ் அமையக்கூடிய கருத்தின் இன்னொரு வடிவு.    இயேசுவானவர், மரித்தோர் தேவகுமாரனுடைய சத்தத்தை கேட்கும் காலம் வரும் என்றார்.  அதைக் கேட்கிறவர்கள் பிழைப்பார்கள் என்றார்.  மரித்த லாசருவை இயேசு உயிரோடு எழுப்பினார் என்பதை நாம் வாசித்திருக்கிறோம். ஆனால் அது இயேசு செய்த அற்புதமல்லவா? ஆனால் இங்கே ஒரு காலத்தை அவர் குறிப்பிடுகிறார், அது எந்தக் காலம்?
பொதுவாக, ஒரு மனிதன் மரிக்கும்போது அவனுடைய வாழ்க்கை முடிந்துவிடுகிறது என்று நாம் நம்புகிறோம்.  சரீரத்தில் ஒருவர் உயிரோடு இருக்கும்போது மரியாதைக்குரிய, மதிப்பிற்குரிய, கனத்திற்குரிய பட்டங்களினாலும்,  பெயர்களினாலும் ஒருவரை அழைத்தாலும், அவரது உயிர் பிரிந்ததும் அவரை ஒரு உயிரற்ற சடலமாகவே தான் நாம் பார்க்கிறோம்!  மரணம் என்றால் ஜீவன் இல்லை அல்லது ஜீவன் போய்விட்டது. இது பொதுவான உலகப்பார்வை.

ஆனால், இயேசுவோ, வாழ்க்கை மற்றும் மரணத்தை குறித்த ஒரு முற்றிலும் வித்தியாசமான கோணத்தை முன்வைக்கிறார்.  இயேசுவானவர் ஏதோ மரித்தோரை எல்லாம் உயிரோடு எழுப்பும் ஒரு அலுவலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளாரா? இல்லை, அவர் மரித்தோரை ஜீவனுக்கு நேராக அழைக்கி
றார். ஒரு அழைப்பு.   வசனம் சொல்லுகிறது. அவரை, அல்லது அவருடைய சத்தத்தை கேட்கிறவர்கள்  பிழைப்பார்கள்.    நான் கேட்கிறவர்கள் என்ற வார்த்தையை முக்கியப்படுத்த விரும்புகிறேன்.  தேவனுடைய சத்தத்தை கேட்கும்போது, மரித்தோரி உயிரோடு வரமுடியுமானால். உயிரோடு இருக்கும் நாம் இன்று அவருடைய சத்தத்தை கேட்கும்போது எவ்வளவாய் உயிர்ப்பிக்கப்படுவோம்?  அவருடைய சத்தத்தை இன்று நீங்கள் கேட்டீர்களா?

(தொனிக்கும்)

2 comments:

  1. This gods word is an eye opener anna poongothai

    ReplyDelete
  2. உயிரோடு இருக்கும் நாம் இன்று அவருடைய சத்தத்தை கேட்கும்போது எவ்வளவாய் உயிர்ப்பிக்கப்படுவோம்? UNMAI ARUMAI

    ReplyDelete

I WILL COME | PROMISE | GOD'S SHADOW MINISTRIES | MARCH 2025

  I WILL COME AND HEAL HIM PROMISE | MARCH 2025 Mat hew 8:7   And Jesus saith unto him, I will come and heal him   Dearly beloved...