தேவனுடைய ஒலிபெருக்கி: படிக்கவேண்டிய
பாடங்கள்
இந்த
கொரோனா பெருந்தொற்றின் நாட்களில், சொல்லப்போனால் கொரோனா யுகத்தில், முன்நாட்களில் நாம் அதிகம் சொல்லாத, கேள்விப்படாத, முக்கியபடுத்தாத
பதங்கள், வார்த்தைகள், சொற்றொடர்கள் இந்நாட்களில் அதிகதிமாய், ஆங்கிலத்திலும் தமிழிலும்
பரவலாக எங்கும் பேசப்பட்டுவருகிறதை நாம் கவனிக்கிறோம். தனிமைப்படுத்தல்,
சுய தனிமைப்படுத்தல், சமூக விலகல், கட்டுபடுத்தப்பட்ட பகுதி, சுத்தம், அறிகுறியல்லாத
மற்றும் மிகவும் புகழ்ப்பெற்ற (தமிழ் அகராதியில் சீக்கிரத்தில் இடம்பெறும்) லாக்டவுன்
அல்லது ஊரடங்கு. மிக சுவாரஸ்யமாய், மூன்று
மாதங்களுக்கு முன்பு, அகராதியில் இந்த வார்த்தைகளுக்கான பொருள் வேறுவிதமாக, ஏன் பொருளே
இல்லாமலும் இருந்திருக்கக்கூடும். ஆனால் கொரோனா
வாழ்க்கையின் பொருளை திருத்தியமைத்துவிட்டது, நம் வாய்மொழியையும் திருப்பிப்போட்டுள்ளது.
இன்றோடு
நமக்கு லாக்-டவுன் அறிவிக்கப்பட்டு 50 நாட்கள் ஆகிவிட்டது. அங்குமிங்குமாய் தளர்வுகளும், ஏன் தாராளமான. பாதுகாப்புடன்
கூடிய மீறுதல்களும் அரங்கேறி, சமூகவிலகலின்
சாரம் காற்றோடு காற்றாய பறக்கவிடப்பட்டாலும்,
நம்முடைய நாடு ஊரடங்கிலிருந்து உயிர்மீட்பை பெற்றுவிட்டது என்று இன்னும் அறிவிக்கவில்லை,
அதற்கு அது தயாராக இருப்பதுபோலும் தெரியவில்லை.
உண்மையில்,
என்னுடைய தொடர் பதிவுகளில் இன்று மீண்டும் தொடரவேண்டும் என்று முன்கூட்டி திட்டமிடவும்
இல்லை. இது ஒரு ஏதேச்சையென்று தான் எடுக்கவேண்டும். நேற்றைய தினம் நான் வாசித்த, தியானித்த, இயேசு கிறிஸ்துவின்
வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம், இந்த நாட்களில்
ஆண்டவர் நமக்கு என்ன சொல்ல விழைகிறார் என்பதை பற்றிய ஒர் உணர்வினை, அசைவினை, அதிர்வினை
எனக்குள் உண்டாக்கிற்று என்று சொன்னால் அது மிகையாகாது.
புகழ்பெற்ற
கிறிஸ்தவ ஊழியரும் சிந்தனையாளருமான காலஞ்சென்ற C.S.லூயிஸ் அவர்கள் "வலியின் பிரச்சனை"
என்ற நூலில் இப்படியாக எழுதுகிறார்.
தேவன் நம்முடைய
இன்பநேரங்களில் மென்மையாக பேசுகிறார்
மனசாட்சியில் சாதாரணமாய் பேசுகிறார்
வலிவேதனையில் சத்தமாய் பேசுகிறார்
செவிடாய்போன உலகத்தை தட்டியெழுப்ப
அவர் பயன்படுத்தும் ஒலிபெருக்கி
அது.
இயேசுவானவர் அதிகம் பயன்படுத்தின வார்த்தை பதங்களில்
ஒன்று, "கேட்கிறதற்கு காதுள்ளவன் கேட்கக்கடவேன்". அப்படியானால், ஒரு சிலருக்கு காது இல்லாமல் இருந்தது என்பதல்ல.கவனிக்கக்கூடிய,கீழ்படியக்கூடிய,ஒப்புக்கொடுக்கக்கூடிய,சுத்தீகரிக்கப்பட்ட,
கவனம்சிதறாத காதுகளே தேவனுடைய ஆவியானவர் தற்சமயம் என்ன சொல்லவருகிறார் என்பதை தெளிவாக
கேட்கும். நிச்சயமாக தேவன் இந்த சூழலிலும்
நம்மிடம் ஒன்றை, அல்லது பலவற்றை, சொல்லிக்கொண்டிருக்கிறார்
என்று நான் நம்புகிறேன்
ஆம், இந்த புதிய சொற்றொடர்களுக்கு உள்ளும் பொருள்
அடங்கியுள்ளது.
கர்த்தர் காற்றிலும், பூமியதிர்ச்சியிலும், அக்கினியிலும்
காணப்படவில்லை. இவைகளுக்கு பின்பு வந்த மெல்லிய சத்தத்தில் …ஒரு மென்மையான
குரலில்…தேவன் வெளிப்பட்டார்.
உங்கள் காதுகள் - ஆவிக்குரிய காதுகள் - கணக்கில்லா
செய்திகள், பொருளற்ற புள்ளிவிவரங்கள், குற்றம்பிடிக்கும் போதகங்களினால் நிரம்பியிருக்குமானால், நிச்சமாய் என் குறிப்பாய் உங்கள் காதுகள் தவறவிடும். கர்த்தர் சொல்லவரும் குறிப்பினை தவறவிடும்…
நம்முடைய் காதுகளை நாம் அடைக்கவும்வேண்டும்…..அவைகளை
திறக்கவும்வேண்டும்….எப்படி?
(Contd…)
Payanulladhaga irundhadhu
ReplyDelete