குமுறலும்
கேட்டலும்…
சோர்ந்துபோன, ஏமாற்றமடைந்த, தோல்வியுற்ற மனநிலையில்
இருந்த எலியா தேவனுடைய மெல்லிய குரலை கேட்டான்.
கடந்துபோவேன் என்று தேவன் சொன்னாலும், அவர் காற்றிலும், பூமியதிர்ச்சியிலும்,
நெருப்பிலும் இருக்கபோவதில்லை என்று எலியா முன்னே அறிந்திருப்பதாகவே படுகிறது. மிக சுவாரஸ்யமானதும், விளங்கிகொள்வதற்கு கடினமானதுமான
காரியம் என்னவென்றால், வேதம் சொல்லுகிறது, இப்பேர்ப்பட்ட 'பயங்கரமான' நிகழ்வுகளுக்கு
பின் தேவனுடைய குரலை எலியாவை நோக்கி மெல்லிய சபதத்தில் தொனித்ததே!
உண்மையில் இது என் மூளையை கசக்கி பிழிய வைத்தது. காற்றில் பறக்கும் தூசு, நிலநடுக்கத்தின் பின்னதிர்வுகள், நெருப்பு கிளப்பிய புகை ~ இவைகளில் தடயங்கள் அவ்வளவு
சீக்கிரம் அகல வாய்ப்பில்லையே. ஆனாலு, இவைகளுக்கு
நடுவில், தேவனுடைய குரல், இடிமுழக்கம் போல் அன்று, ஒரு மெல்லிய சப்தமாக அழைக்கிறது.
எலியாவின் கெபி அனுபவமானது மனிதர்களாகிய நம்முடைய வாழ்க்கையில்
நமக்கு பள்ளத்தாக்குகளும், விரக்திகளும், வருத்தங்களும் இருக்கும் என்பதையும், எல்லாவற்றிற்கும் மேலாக தேவனிடம்
கேட்பதற்கு நம்மிடம் எண்ணிலடங்காத கேள்விகளும் இருக்கும் என்பதை எடுத்துக்காட்டுகிறது.
இந்த
கேள்விகள் எல்லாம நமக்கு பரிச்சமானவைகள் இல்லை என்று சொல்லமுடியுமா? நமக்கும் ஆண்டவரிடம்,
ஆண்டவரை பார்த்து கேட்கவேண்டும் என்று அநேக கேள்விகள் உண்டு அல்லவா? நாம் கேட்டாலும்
கேட்காமல் போனாலும் சரி, நமக்குள்ளே இந்த கேள்விகளின் களஞ்சியம் இல்லாமல் இல்லையே? ஏன் இது நடந்தது? ஏன் இப்படி நடந்திருக்ககூடாது?
ஏன் எனக்கு இது சம்பவிக்கவேண்டும்? போன்ற பலபல கேள்விகள். எலியாவின் மனம் என்கின்ற கெபிக்குள் இந்த கேள்விகள்
தானே இருந்தது.
ஆனால் ஒன்றை நாம் மறக்கக்கூடாது. எலியா அக்கினி இரதத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டான்.
அவன் மரணத்தை சந்திக்கவில்லை.
1.ஏமாற்றத்தின்
உச்சத்தில் இருந்த எலியா தன் தலையின் மேல் விக்கினத்தின் பட்டயம் ஏன் தொங்கவேண்டும்
என்று தேவனிடம் கேட்கவிரும்பினான் ~ மனிதனின் பெலவினம்!
2.தேவன்
எலியாவை சந்தித்து, மெல்லிய குரலில் அவனோடுகூட பேசினார். காற்று, நிலஅதிர்வு, நெருப்பு இதன் பின்னண்யில்
அ வருடைய இரகசிய குரல் வெளிப்பட்டது ~தேவனின் ஊடகம்
3.எலியாவின் செவிகள், கூச்சலும்
குழப்பத்திற்கும் இடையில் தேவனுடைய மெல்லிய குரலை கேட்கும் அளவிற்கு உணர்வுள்ளதாகவும்,
கூர்மையுள்ளதாகவும் இருந்தது ~ ஊழியனின் உணர்வுள்ள
ஆவி.
எல்லா சமயங்களிலும் நம்முடைய ஆவி தேவனுடைய மெல்லிய
குரலை கேட்பதற்கு உணர்வுள்ள்தாக இருக்கவேண்டும்.
மனச்சோர்வு உங்களை மரணத்திற்கு நேராக நடத்திடாது.
தன் சத்தத்திற்கு செவிகொடுக்கும் ஆடுகளுக்கே
மேய்ப்பன் நித்திய ஜீவனை தருகிறார்.
முற்றும்.
No comments:
Post a Comment